விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் திருமணம் முடிந்து வீட்டில் வைத்து சில சடங்குகளை நடத்தியது போல முத்து மற்றும் மீனா இருவருக்கும் தற்போது முத்துவின் பாட்டி சடங்குகளை நடத்தி இருக்கிறார். அந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டு இருக்கிறது. கோவிலுக்கு வெளியே பூ மாலை கட்டிக் கொண்டிருக்கும் ஒரு பாவப்பட்ட ஏழைப் பெண்ணாக இருக்கிறார் மீனா. அவரை மனோஜ்க்கு திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். திருமணத்தன்று நடந்த குழப்பத்தால் மனோஜ் மண்டபத்தில் இருந்து ஓடி விடுகிறார். பின்னர் அவரது தம்பி முத்துவை மீனாவிற்கு திருமணம் செய்து விடுகின்றனர். ஆரம்பத்தில் இருவரும் பிடிக்காமல் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இணைந்து வாழ தொடங்கி இருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முத்துவின் தாயார் விஜயாவுக்கு முத்துவையும் மீனாவையும் சுத்தமாக பிடிக்காது. அவர் தனது மூத்த மகன் மனோஜ் மீது தான் அதிக அளவு பாசம் வைத்திருக்கிறார். மனோஜ்க்கு பணக்காரப் பெண்ணான ரோகிணியை திருமணம் செய்து வைக்க அவர் முடிவெடுக்கிறார். ஆனால் உண்மையில் ரோகிணி பெரிய பணக்காரர் ஒன்றும் கிடையாது. மேலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது. இந்த விஷயத்தை மறைத்து தற்போது மனோஜை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் ரோகிணி. இது அடுத்து எந்த அளவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. எனினும் இருவருக்கும் திருமணம் முடிந்து தற்போது வீட்டிற்கு வந்துள்ளனர். வீட்டுக்கு வந்த அவர்கள் குடத்தில் மோதிரத்தை போடுவது, தலையில் அப்பளம் உடைப்பது என்று சில சடங்குகளை செய்தனர்.

அதை பார்த்துவிட்டு மீனா மற்றும் முத்து இருவருக்கும் அது போல் செய்ய வேண்டும் என்கிற ஆசை வந்தது. இதை முத்துவின் பாட்டி மீனாவிம் கேட்க, எனக்கும் அது போல் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்ததாக கூறுகிறார் மீனா. பின்னர் பாட்டி, அண்ணாமலை, முத்து மீனா ஆகிய நால்வரும் அமர்ந்து இந்த சடங்குகளை செய்கின்றனர். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television