பாக்கியலட்சுமி தொடரில் காலனி தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை முடிந்து தற்போது ரிசல்ட் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த ப்ரோமோவை தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ளது. பாக்கியலட்சுமி தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த சீரியலில் வைதேகி நகர் காலனியில், காலனியின் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாக்கியா போட்டியிட முடிவெடுத்து இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட ராதிகா முடிவெடுத்திருக்கிறார். மேலும் பாக்யாவை படிக்காதவர் என்றும் படித்த தன்னை தேர்தலில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் பேசி இருந்தார் ராதிகா. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார் கோபி. தற்போது இனியா மற்றும் ராமமூர்த்தியும் கோபியுடனே வந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் வசிக்கும் வைதேகி நகர் பகுதி காலனியில் அடிக்கடி மின்விளக்குகள் எரிவதில்லை, நாய்கள் தொந்தரவு என்று தொடர்ந்து இருந்து வருகிறது. இதை தற்போது செயலாளராக இருப்பவரிடம் கேட்டால் அவர் பொறுப்பற்ற முறையில் பதில் அளிக்கிறார். இதனால் அந்த பொறுப்புக்கு மீண்டும் தேர்தல் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதில் பாக்கியா மற்றும் ராதிகாவுக்கு இடையே கடுமையான போட்டி நிலவியது.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ராதிகா வெறும் 112 வாக்குகள் மட்டுமே வாங்கியுள்ள நிலையில் பாக்கியா 1268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று இருக்கிறார். இதை பார்த்த கோபியும் ராதிகாவும் பேச முடியாமல் வாயடைத்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.!
Youtube Video Code Embed Credits: Vijay Television