நன்றி ஜோ.! எனக்கு அனைத்தையும் கொடுத்தது அந்த படம் தான்.! ஜோதிகாவிடம் உருகிய சூர்யா.!

நடிகர் சூர்யா தற்போது தனது மனைவி ஜோதிகாவிற்கு நன்றி தெரிவித்து ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். காக்க காக்க திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் அவர் மலரும் நினைவுகளை புகைப்படங்களாக பகிர்ந்திருக்கிறார். 2003 ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா ஜோதிகா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் காக்க காக்க. இந்த படம் வெளியாகி தற்போது 20 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது .2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன் தனது இரண்டாவது படமே சூர்யாவை வைத்து காக்க காக்க படத்தை இயக்கினார். முதல் இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெறவே கௌதம் வாசுதேவ் மேனன் மிகப்பெரிய இயக்குனராக அவதாரம் எடுத்தார்.

நன்றி ஜோ.! எனக்கு அனைத்தையும் கொடுத்தது அந்த படம் தான்.! ஜோதிகாவிடம் உருகிய சூர்யா.! 1

விளம்பரம்

நேருக்கு நேர் என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி பூவெல்லாம் கேட்டுப்பார், ஃபிரண்ட்ஸ், நந்தா, உன்னை நினைத்து, மௌனம் பேசியதே என்று தனக்கென ஒரு பாணியில் நடித்து வந்த சூர்யாவிற்கு போலீஸ் வேடமாக முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த படம் தான் காக்க காக்க. ஏசிபி அன்புச்செல்வன் ஐபிஎஸ் என்கிற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக முதல்முறையாக நடித்து அசத்தியிருந்தார் சூர்யா. இன்றைக்கு அவர் நடிக்கும் சிங்கம் படத்திற்கு எல்லாம் இது முன்னோடி என்று கூட கூறலாம். இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது அந்த படப்பிடிப்புகளில் எடுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து தற்போது சூர்யா படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்து இருக்கிறார். அதில் அவர், “இந்த படம் தான் எனக்கு அனைத்தையும் கொடுத்தது”.

தொடர்புடையவை  உயிருக்கு போராடும் கயல் பெரியப்பா.! கயல் எழிலுக்கு சாபம் விடும் வடிவு.! கயல் ப்ரோமோ இதோ.!

நன்றி ஜோ.! எனக்கு அனைத்தையும் கொடுத்தது அந்த படம் தான்.! ஜோதிகாவிடம் உருகிய சூர்யா.! 3

விளம்பரம்

அன்பு செல்வன் எப்பொழுதும் எனது மனதிற்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரம். என்னுடன் காக்க காக்க படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய மனைவி ஜோதிகாவிற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்தான் முதன் முதலில் எனக்கு இந்த படம் குறித்து பேசினார்.

நன்றி ஜோ.! எனக்கு அனைத்தையும் கொடுத்தது அந்த படம் தான்.! ஜோதிகாவிடம் உருகிய சூர்யா.! 5

விளம்பரம்

மேலும் என்னுடைய சக நடிகர்களுக்கும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கும் நன்றி. நிறைய நல்ல நினைவுகளுடன் இதை பகிர்கிறேன். என்று சொல்லி ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் எடிட்டர் ஆண்டனி ஆகியோர்களையும் டேக் செய்து அவர் இந்த புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்..! இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment