அமிர்தாவை தேடி பாக்யா நடத்தும் கேன்டீனுக்கே வந்த கணேஷ்.! பீதியில் உறைந்த பாக்யா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடரில் தற்போது அமிர்தாவை தேடி அவரது முன்னாள் கணவர் கணேஷ், பாக்யா நடத்தும் கேண்டீன் இடத்திற்கே வந்து விடுகிறார். அவரைப் பார்த்த பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அந்த அதிரடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. டிஆர்பி ரேட்டிங்கில் அவ்வப்போது இடத்தைப் பிடித்து வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடர் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்றைய தினம் பாக்யாவிற்கு கேண்டீன் நடத்துவதற்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லி அதிகாரிகள் சொல்ல, தொடர்ந்து பாக்யாவின் பொருட்காட்சி கேண்டீன் நடைபெற்று வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தாவை தேடி பாக்யா நடத்தும் கேன்டீனுக்கே வந்த கணேஷ்.! பீதியில் உறைந்த பாக்யா.! 1
தொடர்ந்து வீட்டிற்கு வரும் பாக்யாவிடம் இந்த ஆர்டரை மீண்டும் யாருக்காவது கொடுக்குமாறு ஈஸ்வரி பாக்யாவை வற்புறுத்துகிறார். ஆனால் தான் தொடர்ந்து கேண்டீனை நடத்துவேன் என்று சொல்லி பாக்யா சபதம் போடுகிறார். இந்த நிலையில் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் அமிர்தாவை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது பாக்யா நடத்தும் பொருட்காட்சிக்கு வந்து நிற்கிறார். அவரைப் பாக்யா பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அவர் அமிர்தாவை சந்தித்து விட்டால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.


நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்