வைல்ட் கார்டு என்ட்ரிகளை பயங்கர அசிங்கப்படுத்தும் நிக்ஸன்.! அவமானாக உணரும் அர்ச்சனா.!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அர்ச்சனா பற்றி நிக்சன் கூற வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். இதனால் அர்ச்சனாவின் முகமே வாடிப் போய் சோகத்தில் அமர்ந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 65 நாட்களைக் கடந்து இன்று 66-வது நாளில் அடியெடுத்து வைக்கிறது. நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு மாத காலமே இருப்பதால் பிக் பாஸ் சில அதிரடியான டாஸ்க்குகளை கொடுத்து வருகிறார். இருப்பினும் இந்த டாஸ்க் பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சீசன் 1ல் கொடுத்தது போல இன்னமும் டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வைல்ட் கார்டு என்ட்ரிகளை பயங்கர அசிங்கப்படுத்தும் நிக்ஸன்.! அவமானாக உணரும் அர்ச்சனா.! 1
இந்த நிலையில் நேற்று பொம்மலாட்டம் என்கிற ஒரு டாஸ்க் வைக்கப்பட்டு இருந்தது. இந்த டாஸ்கை கூட பிக்பாஸ் போட்டியாளர்கள் சரிவர செய்யாமல் சுவாரஸ்யம் குறைந்தே காணப்பட்டது. பெரிய அளவில் சுவாரஸ்யமாக செல்லாததால் அந்த டாஸ்கை நேற்றோடு பிக் பாஸ் குழுவினர் முடித்திருந்தனர். இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீடு கல்லூரியாக மாறி இருக்கிறது. ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கல்லூரி ஆசிரியர்களாகவும் மாணவர்களாகவும் மாறி இருக்கின்றனர். அதில் நிக்ஸன் அர்ச்சனா பற்றி சில தகவல்களை கூறுகிறார். ரத்தம் வர அளவிற்கு அடித்துக் கொண்டபோதிலும் ஒற்றுமையாக இருந்த இந்த பிக் பாஸ் வீடு ஐந்து வைல்டு கார்டு என்ட்ரிக்குப் பின்னர் ஒற்றுமை குலைந்து விட்டதாக கூறுகிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  அபிராமி, சைந்தவி உட்பட நடுவர்கள் அனைவரையும் அழ வைத்த சிறுவன்.! நெகிழ்ச்சியான ப்ரோமோ.!

வைல்ட் கார்டு என்ட்ரிகளை பயங்கர அசிங்கப்படுத்தும் நிக்ஸன்.! அவமானாக உணரும் அர்ச்சனா.! 3
இந்த பேச்சை மற்ற ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்கின்றனர். அப்போது அர்ச்சனாவின் முகம் வாடி போய் அமர்ந்திருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment