ஆஹா கல்யாணம் தொடரில் நடந்த அதிரடி மாற்றம்.! இனி இவருக்குப் பதில் இவர்.!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஆஹா கல்யாணம்’ தொடரில் தற்போது இரண்டு பெரிய மாற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. சீரியலில் இருந்து முக்கிய நபர் ஒருவர் விலகி இருக்கும் நிலையில், நடிகை ஒருவர் புது என்ட்ரியாக உள்ளே வந்திருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கி சில நாட்களிலேயே மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கும் ஒரு தொடர் தான் ‘ஆஹா கல்யாணம்’. இதில் விக்ரம் ஸ்ரீ_ அக்ஷயா, மௌனிகா, பவ்யா ஸ்ரீ, விபீஷ் அஷ்வந்த், காயத்ரி ஸ்ரீ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பேராசை கொண்ட கோடீஸ்வரி என்கிற தாய், தனது மகள்களை பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கிறார். ஆனால் அதில் பல பிரச்சினைகள் எழுகிறது.

ஆஹா கல்யாணம் தொடரில் நடந்த அதிரடி மாற்றம்.! இனி இவருக்குப் பதில் இவர்.! 1
மூத்த மகளுக்கு நிச்சயம் செய்திருந்த சூர்யாவை இரண்டாவது மகளும், சூர்யாவின் தம்பியை மூத்த மகளும் திருமணம் செய்து கொள்கின்றனர். இதிலிருந்து பிரச்சனை தொடங்கி நடந்து வருகிறது. இந்த கதை ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாட்களிலேயே டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்து தற்போது விஜய் டிவியின் நம்பர் 2 சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளனர். இந்த சீரியலில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த சீரியலை இயக்கி வந்த பிரான்சிஸ் கதிரவன் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘காற்றுக்கென்ன வேலி மற்றும் ‘வேலைக்காரன்’ ஆகிய சீரியல்களை இயக்கியவர்.

விளம்பரம்
தொடர்புடையவை  வெறுப்பை கொட்டிய நிரூப்.. கதறி அழுத அபி.. அரவணைத்த ஜூலி | BiggBoss Ultimate Promo

ஆஹா கல்யாணம் தொடரில் நடந்த அதிரடி மாற்றம்.! இனி இவருக்குப் பதில் இவர்.! 3
இவருக்கு பதிலாக நடிகரும் இயக்குனருமான ஹரிஷ் ஆதித்யா இனி ‘ஆஹா கல்யாணம்’ சீரியலை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஹரிஷ் ஆதித்யா ஏற்கனவே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தாலாட்டு’ சீரியலையும், விஜய் தொலைக்காட்சியில் ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலை சிறிது காலமும் இயக்கியவர். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 2 சீரியலாக இருக்கும் ஆஹா கல்யாணத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த தொடரில் புது வருகையாக நடிகை ஷெரின் ஜானும் நடிக்க இருக்கிறார். சூர்யாவின் கடைசி தம்பி ராமுக்கு ஜோடியாக பிரபா இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷெரின் ஜான் இனி ராமுக்கு ஜோடியாக, பிரபாவுக்கு போட்டியாக புது கதாபாத்திரத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

ஆஹா கல்யாணம் தொடரில் நடந்த அதிரடி மாற்றம்.! இனி இவருக்குப் பதில் இவர்.! 5
ஷெரின் ஜான் ஏற்கனவே கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் நடித்தவர். இது மட்டுமல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாரதிகண்ணம்மா’, ‘பகல் நிலவு’ போன்ற சீரியல்களிலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லட்சுமி ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘அன்பே வா’ ஆகிய தொடர்களில் நடித்திருந்தார். மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சித்திரம் பேசுதடி’ சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் ஆஹா கல்யாணம் தொடரில் கடைசி தம்பியாக ராமுக்கு ஜோடியாகவும், மஹாவின் கடைசி தங்கை பிரபாவுக்கு போட்டியாகவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment