மிக்ஜாம் புயலிலும் விடமால் ஷூட்டிங் நடத்திய விஜய் டிவி சீரியல்.! வைரலாகும் வீடியோ இதோ..!

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் அடித்து நொறுக்கி கொண்டிருந்த நிலையிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்று இடை விடாமல் ஷூட்டிங்கை நடத்தி இருக்கிறது. இந்த வீடியோவை அந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவரே வெளியிட,’உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா’ என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கடந்த 40 வருடங்களில் முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருந்த ‘மிக்ஜாம்’ புயல் தற்போது கரையை கடந்திருக்கிறது. இதனால் மழையின் அளவு படிப்படியாக குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் பல தொலைக்காட்சி தொடர்களும் டப்பிங் பணிகள் மற்றும் ஷூட்டிங் பணிகளை சரிவர முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலிலும் விடமால் ஷூட்டிங் நடத்திய விஜய் டிவி சீரியல்.! வைரலாகும் வீடியோ இதோ..! 1

விளம்பரம்

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘மகாநதி’ என்கிற சீரியல் புயலையும் பொருட்படுத்தாமல் ஷூட்டிங் நடத்தியிருக்கிறது. அந்த வீடியோவை இந்த நாடகத்தில் கங்கா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். நான்கு மகள்களை பெற்ற தந்தை ஒரு கட்டத்தில் கடன் பிரச்சனையில் இறந்து விட, அவரது இறப்புக்கு பின்னர் மகள்களின் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பது குறித்த கதை தான் ‘மகாநதி’ தந்தையின் மரணத்திற்கு மகள்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த நாடகத்தில் கங்கா கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரதீபா சமீபத்தில் விலகி இருந்தார்.

தொடர்புடையவை  என் அம்மா சாவுக்கு இவனும் காரணம்னு பேசாமலே இருந்தேன்..அண்ணன் பற்றி பேசிய அமீர்

மிக்ஜாம் புயலிலும் விடமால் ஷூட்டிங் நடத்திய விஜய் டிவி சீரியல்.! வைரலாகும் வீடியோ இதோ..! 3

விளம்பரம்

அவருக்குப் பதிலாக பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ் நடித்து வருகிறார்.
இவர் நடிக்க வந்து சில தினங்களே ஆகியிருக்கும் நிலையில் தற்போது புயலையும் பொருட்படுத்தாமல் தான் நடித்திருப்பதாக அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். பலத்த காற்று வீசி அவரது குடையே பறக்கும் தருவாயில் இருந்த போதிலும் அவர் விடாமல் அந்த காட்சியில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த பலரும் ‘உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா’ என்று சொல்லி கலாய்த்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

விளம்பரம்

Leave a Comment