இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் ஏ.எல் விஜய் தனது மகன் துருவாவின் பிறந்தநாளை குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 1
2007ம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ‘கிரீடம்’ என்கிற படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல் விஜய். முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுக்க தொடர்ந்து படங்களை இயக்கத் தொடங்கினார்.

விளம்பரம்

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 3
பின்னர் 2019ம் ஆண்டு இவர் இயக்கிய ‘மதராசபட்டினம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் 2011ம் ஆண்டு இவர் இயக்கிய ‘தெய்வத் திருமகள்’ திரைப்படம் பலரின் மனம் கவர்ந்த திரைப்படமாக இருந்தது. பலரையும் அழ வைத்த இந்த திரைப்படம் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்திற்கான விருதுகளையும் வாங்கியிருந்தது.

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 5
அதன் பின்னர் ‘தாண்டவம்’, ‘தலைவா’, ‘சைவம்’, ‘இது என்ன மாயம்’, ‘தேவி’, ‘வனமகன்’, ‘கணம்’, ‘தேவி 2’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார்

விளம்பரம்
தொடர்புடையவை  குஷி படத்தில் வரும் ஜோதிகா, விஜய் போலவே மேகம் கருக்குது பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தாமரை & பார்த்தி

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 7
இவர் தற்போது அருண் விஜய் மற்றும் எமி ஜாக்சனை வைத்து இயக்கி வரும் ‘மிஷன் சாப்டர் 1 – அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் இறுதி கட்டங்களை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பெயரிடப்படாத புது படம் ஒன்றிலும் கமிட்டாகி இருக்கிறார்.

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 9
ஏ.எல் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை அவருக்கு அமலாபாலுடன் 2014ம் ஆண்டு திருமணமானது. மூன்று ஆண்டுகளில் இந்த தம்பதியினர் பிரிந்து விட்டனர். பின்னர் 2019்ம் ஆண்டு விஜய்க்கு ஐஸ்வர்யா என்கிற மருத்துவருடன் திருமணம் முடிந்தது. இந்த தம்பதிகளுக்கு 2020ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

விளம்பரம்

இயக்குனர் ஏ.எல் விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்.! ஆல்பம் இதோ.! 11
தனது மகனுக்கு துருவா என பெயரிட்டுள்ளார் விஜய். இந்த நிலையில் மகனின் பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைராலகி வருகிறது. விஜயின் மகனுக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விளம்பரம்

Leave a Comment