பாக்கியா ஒரு முட்டாள் என்று சொன்ன கோபி.! கிழித்து தொங்கவிட்ட ராமமூர்த்தி.! வேற லெவல் தாத்தா.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்யாவிற்கு கிடைக்க இருந்த சமையல் ஆர்டரை கெடுத்து விட்ட ராதிகாவை கோபியின் அப்பா கிழித்து தொங்கவிட்டார். பாக்யாவின் கணவர் கோபியின் இரண்டாவது மனைவிதான் ராதிகா. ராதிகா ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அங்கு கேண்டீன் ஆர்டரை பிடிப்பதற்காக பாக்யா மிகுந்த முயற்சி செய்தார். ஆனால் பாக்யா மீது இருக்கும் வன்மத்தை காட்டுவதற்காக ராதிகா அந்த ஓனரிடம் பேசி அந்த ஆர்டரை கேன்சல் செய்யுமாறு செய்துவிட்டார். பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது காலனியில் செக்கரட்டரி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ராதிகா 112 வாக்குகள் வாங்க, பாக்யா 1260 வாக்குகளுக்கு மேல் பெற்று அபார வெற்றி பெற்றிருந்தார். இதனால் பாக்யா மீது மிகக் கடுப்பில் இருக்கிறார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாக்கியா ஒரு முட்டாள் என்று சொன்ன கோபி.! கிழித்து தொங்கவிட்ட ராமமூர்த்தி.! வேற லெவல் தாத்தா.! 1

பாக்கியாவை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று ராதிகா எண்ணிக் கொண்டிருக்கும் நிலையில் அவருக்கு நல்ல வாய்ப்பாக கேண்டீன் ஆர்டரை கெடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. பாக்கியாவிற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை தன் சமையல் மீதான நம்பிக்கை தான். அவர் ஒரு திருமண மண்டபத்தின் ஆர்டரை எடுத்து அதை வெற்றிகரமாக நடத்தியும் காட்டியிருந்தார். கம்பெனி கேன்டீனை ஆர்டர் எடுத்த பாக்கியாவுக்கு எதிராக, ராதிகா இவருக்கு ஏன் ஆர்டர் கொடுக்கிறீர்கள் இவர் அவ்வளவு பெரிய சமையல்காரர் எல்லாம் ஒன்னும் கிடையாது என்று தப்பு தப்பாக போட்டு கொடுக்கிறார். இதனால் கம்பெனியின் ஓனரும் பாக்கியாவிடம் சாரி உங்களுக்கு சமையல் ஆர்டரை கொடுக்க முடியாது என்று கூறுகிறார். இதனால் பாக்கியா கதறி அழுகிறார்.

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட கோபியின் அப்பா ராமமூர்த்தி நேராக ராதிகா வீட்டுக்கு வந்து கோபி மற்றும் ராதிகாவை கிழித்து தொங்க விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண கீழே இருக்கும் வீடியோவை பார்க்கவும்..! Watch the below video.!

YouTube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்