உங்க அம்மா ஒருத்தன் கூட ஹோட்டல்ல சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா.! பாக்கியவை தப்பாக பேசும் கோபி

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கோபி பாக்கியாவின் ஒழுக்கத்தை பற்றி இனியா மற்றும் தாத்தா ராமமூர்த்தியிடம் தப்பு தப்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் இனியாவும் தாத்தாவும் செம கடுப்பில் இருக்கிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்தத் தொடரில் கோபி தனது மூத்த மனைவி பாக்யாவிடம் இருந்து விவாகரத்து வாங்கிவிட்டு தற்போது இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால் ராதிகாவிற்கு எப்பொழுதும் எதை தொடங்கினாலும் பெருத்த அடியாக விழுகிறது. எடுத்துக்காட்டாக காலனி தேர்தலில் பாக்யாவை எதிர்த்து ராதிகா போட்டியிட்டார். ஆனால் ராதிகாவால் வெற்றி பெற முடியவில்லை. இதனால் எப்படியாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணத்தில் துடித்துக் கொண்டிருக்கிறார் ராதிகா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்க அம்மா ஒருத்தன் கூட ஹோட்டல்ல சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கா.! பாக்கியவை தப்பாக பேசும் கோபி 1
தற்போது பாக்கியாவிற்கு ராதிகா வேலை செய்யும் அலுவலகத்திலேயே கேன்டீன் ஆர்டர் கிடைத்தது. ஆனால் ஓனரிடம் பாக்யாவை பற்றி தப்பு தப்பாக போட்டு கொடுத்து பாக்கியாவிற்கு அந்த கேண்டீன் காண்ட்ராக்ட் கிடைக்க விடாமல் செய்துவிட்டார் ராதிகா. இதனால் பாக்யா மிக மன உளைச்சலில் இருக்கிறார். திருமண ஆர்டர் எடுத்த உரிமையாளரிடம் ஏழு லட்ச ரூபாய் கடன் வாங்கித்தான் இந்த கேண்டின் ஆர்டரை பிடித்திருந்தார் பாக்யா. ஆனால் தற்போது அதில் பணத்தையும் செலவு செய்து விட்டு கடனையும் கட்ட முடியாமல் முழித்து வருகிறார். இந்த நிலையில் பாக்யா 7 லட்சம் கடன் வாங்கிய அந்த திருமண மண்டபத்தின் உரிமையாளரை ஒரு ஹோட்டலில் வைத்து சந்தித்து தன்னுடைய சூழ்நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபி பாக்கியாவை பார்த்து தவறாக நினைத்து விடுகிறார். இதை ராதிகாவிடம் கோபி சொல்ல, உங்களுக்கு என்ன பாக்யா மீது அவ்வளவு அக்கறை என்று கேட்டு கோபியை மடக்குகிறார் ராதிகா.

பின்னர் வீட்டிற்கு வரும் கோபி, இனியா மற்றும் தாத்தா இருவரும் அமர்ந்திருக்கும் போது அவரிடம் அவர்களிடம் பாக்யா குறித்து சொல்கிறார். ஹோட்டலில் ஒரு ஆண் ஒருவருடன் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதாக தவறாக கூறுகிறார் கோபி. இதனால் இனியா அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை அதில் ஒன்றும் தவறில்லையே என்று கேட்கிறார். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. பாக்யாவின் ஒழுக்கத்தை சந்தேகப்படும் கோபியை தாத்தா வெளுத்து வாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்