பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் பாக்கியலட்சுமியின் இளைய மகளாக இருக்கும் இனியா தற்போது தனது தாயுடன் வீட்டிற்கு செல்வாரா? இல்லை தந்தை கோபியுடன் செல்வாரா? என்பது குறித்த எதிர்பார்ப்பு பலமாக எழுந்து இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பாக்கியலட்சுமி. இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். முதல் மகன் செழியன், இரண்டாவது மகன் எழில் மூன்றாவது மகள் இனியா. இதில் செழியன் மற்றும் எழிலுக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் கோபி இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு கோபி இவ்வாறு செய்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியது. கோபியின் பெற்றோர்களே அவரது இரண்டாவது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே குடி வந்து விட்டார். ராதிகாவை திருமணம் செய்து கொண்ட நாள் முதல் அவருக்கு நிம்மதியே இல்லை. தொடர்ந்து வீட்டில் ஏதாவது சண்டை சச்சரவு பிரச்சனைகள் என எழுந்து கொண்டே இருக்கிறது. இதனால் அளவுக்கு அதிகமாக குடிக்கவும் தொடங்கி இருக்கிறார் கோபி. இந்த நிலையில் பாக்யாவிடம் ஏற்பட்ட மனக்கசப்பால் மகள் இனியா கோபியுடன் வசித்து வருகிறார். ஆனால் இனியாவுக்கு கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை சுத்தமாக பிடிக்காது. ராதிகா இனியாவை தற்போது அளவுக்கு மீறி கண்டித்து வருகிறார். இனியா தனது ஆண் நண்பருடன் அமர்ந்து ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு வரும் ராதிகா கத்தி கூப்பாடு போட்டு இனியாவை அசிங்கப்படுத்துகிறார். அங்கிருந்து பிரச்சினைகள் ஆரம்பமாகிறது.

பின்னர் ஒரு கட்டத்தில் சண்டை அதிகமாக தற்கொலை முடிவு எடுக்கிறார் இனியா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இனியா தற்போது அவரது தாய் பாக்கியலட்சுமி உடன் செல்வாரா? இல்லை தந்தை அரவணைப்புக்காக அவருடன் செல்வாரா என்பது குறித்து தெரியவில்லை. அந்த பரபரப்பான திருப்பங்களுடன் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television