ஆலியா மகனின் முதல் பிறந்தநாள்.! மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் குடும்பம்.!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் இணைந்து தனது மகனின் பிறந்தநாளை மாலத்தீவில் மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கின்றனர். குடும்பத்துடன் மாலத்தீவு சென்று இருக்கும் அவர்கள் இந்த பிறந்த நாளை கொண்டாடி அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கின்றனர். அந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகளும் பார்வையாளர்களும் குவிந்து வருகின்றனர். இணையத்தை கலக்கி வரும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள். இவர்களின் இளைய மகன் அர்ஷுக்கு தற்போது முதல் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதற்காக அவர்கள் மாலத்தீவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணலில் விளையாண்டும், கடலில் குளித்தும் அவர்கள் ஜாலியாக இருக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார்கள். குளிர் 100 டிகிரி என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகர் சஞ்சீவ். இவருக்கு வெள்ளித்திரை பெரிய அளவில் கை கொடுக்காததால் சின்னத்திரை பக்கம் தலைகாட்டத் தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற சீரியலில் கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆலியா மகனின் முதல் பிறந்தநாள்.! மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் குடும்பம்.! 1

விளம்பரம்

அதே நாடகத்தில் தன்னுடன் கதாநாயகியாக செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா மானசாவுடன் அவருக்கு காதல் ஏற்பட்டது., சஞ்சீவ் அடிப்படையில் ஒரு இஸ்லாமியர் என்பதால் ஆலியாவின் குடும்பத்தில் இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே குடும்பத்தின் எதிர்ப்பை மீறி இவர் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர்களுக்கு ஐலா மற்றும் அர்ஷ் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு மிக அழகாக பொம்மை போல் இருப்பதால் இவர்களின் சேட்டைகளை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. சஞ்சீவ் ஆலியா என்ற youtube சேனல் பக்கத்தை தொடங்கிய அவர்கள் தொடர்ந்து பிள்ளைகளின் வீடியோக்கள் மற்றும் டூர் செல்வது, அவுட்டிங் செல்வது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் வீடியோக்களாக எடுத்து தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்களை பார்ப்பதற்கும் ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

தொடர்புடையவை  நீ யாருடா என்ன பத்தி பேச.! மீண்டும் விக்ரமனை ஒருமையில் மிக அசிங்கமாக பேசிய அசீம்.!

ஆலியா மகனின் முதல் பிறந்தநாள்.! மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் குடும்பம்.! 3

விளம்பரம்

இந்த நிலையில் தற்போது அர்ஷுக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளனர். அனைவரையும் மாலத்தீவு அழைத்துச் சென்ற சஞ்சீவ் தற்போது கடற்கரையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் ஜாலியான வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். விரைவில் அர்ஷுக்கு கேக் வெட்டி கொண்டாடப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பகிர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sanjiev & Alya

விளம்பரம்

1 thought on “ஆலியா மகனின் முதல் பிறந்தநாள்.! மாலத்தீவில் கேக் வெட்டி கொண்டாடிய சஞ்சீவ் குடும்பம்.!”

Leave a Comment