பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவிற்கு ஒரு காதலர் கிடைத்து விட்டதாக தெரிகிறது. அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது அடுத்த விறுவிறுப்பான கட்டங்களை எட்டி வருகிறது. பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக இருக்கிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் ஹீரோயின் பாக்யாவிற்கு அடுத்தடுத்து ஏதாவது பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. முதலில் தனது மூத்த மகன் செழியன் கிறிஸ்தவ பெண்ணான ஜெனியை திருமணம் செய்து கொள்வது தொடங்கி ழ, பின்னர் தனது கணவர் கோபியை தன்னை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டிருப்பது வரை பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் பாக்யா. தற்போது இளைய மகனான எழிலுக்கு பல தடைகளை மீறி அமிர்தாவையும் திருமணம் செய்து வைத்திருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் பாக்கியாவின் பிரச்சினைகள் இன்னும் முடிந்த பாடில்லை. பாக்யா தற்போது வசித்து வரும் வீட்டை 70 லட்சம் கொடுத்து வாங்கிக் கொள்ளுமாறு கோபி வற்புறுத்தி வருகிறார். இதனால் வீட்டில் பிரச்சனைகள் பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது பாக்யாவிற்கு மீண்டும் சமையல் காண்ட்ராக்ட் கிடைத்துள்ளது. திருமண ஆர்டர்கள் எடுக்கும் அவர் தொடர்ந்து ஆர்டர்கள் செய்து ஆறு மாதத்தில் கோபியின் கடனை அடைக்க இருப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் தொடரில் சற்று திருப்பமுனையாக இனியாவிற்கு ஜோடியாக சரண் என்கிற ஒருவர் வருவது போல் காட்டப்படுகிறது. இன்றைய எபிசோடில் இனியா டியூஷனில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு சரண் என்கிற ஒரு மாணவர் உள்ளே வருகிறார். இடம் இல்லாததால் அவர் இனியாவிற்கு அருகில் அமர்ந்து கொள்கிறார்.
மேலும் இனியாவிடம் பேனா இருக்கா என்று கேட்க இனியாவும் ஒரு பேனா எடுத்துக் கொடுக்கிறார். ஆனால் என்னிடமே பேனா இருக்கு என்று இனியாவை சரண் கலாய்க்கிறார். மேலும் டியூஷன் முடிந்து வெளியே வரும் இனியா அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருக்கிறார். பின்னர் இருவரும் கை கொடுத்து நண்பர்கள் ஆகிவிடுகின்றனர். இதனால் இனியாவிற்கும் அந்த பையனுக்கும் காதல் ஏற்படும் என்று தெரிகிறது. இதை வைத்து கதை கொஞ்ச நாளைக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television