பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பெற்றுள்ள பெண் போட்டியாளர் ஒருவரின் முதல் பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஹீரோயினாக அறிமுகமாகும் அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி 86 நாட்களை இன்றுடன் நிறைவு செய்கிறது. இறுதிக்கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது பத்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். பிரதீப்பை ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றி விட, பவா செல்லதுரை தானாக முன்வந்து வெளியேறிவிட்டார். இவர்கள் போக ஜோவிகா, அக்ஷயா, வினுஷா, யுகேந்திரன், கானா பாலா, ஐஷு, அன்னபாரதி, விக்ரம், சுரேஷ் உள்ளிட்ட 13 பேர் எவிக்டாகி வெளியேறி இருக்கின்றனர்.

பிக் பாஸில் கலந்து கொண்ட பின்னர் பலருக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் தற்போது பிக் பாஸில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பூர்ணிமாவிற்கு ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர் நடிக்க இருக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 7ன் தவிர்க்க முடியாத சக்தியாக இருப்பவர்கள் மாயா மற்றும் பூர்ணிமா தான். இவர்கள் இருவர் மீது பல விமர்சனங்கள் இருந்த போதிலும் இவர்கள் இருவரும் இல்லாவிட்டால் இந்த சீசன் சுவாரசியமாக இருந்திருக்காது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் இவர் முக்கிய போட்டியாளராக தொடர்ந்து வருகிறார்.

இதற்கிடையே பூர்ணிமா ரவி கதாநாயகியாக அறிமுகமாகும் ‘செவப்பி’ என்கிற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படமானது ‘ஆஹா தமிழ்’ என்கிற ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. எம்.எஸ் ராஜா என்பவர் இந்த படத்தை இயக்க இருக்கிறார். முட்டையின் ஓடு ஒன்று இரண்டாக உடைகிறது. அதில் ‘செவப்பி’ என்கிற பெயர் எழுதப்பட்டிருக்கிறது. இந்த டைட்டிலை பார்த்த பலரும் முதல் லுக் போஸ்டரே வித்தியாசமாக இருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றன. பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தை கொண்டு பூர்ணிமா சினிமாவில் கண்டிப்பாக ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் பூர்ணிமாவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
Say hello 👋🏼 to #Sevappi, the tiny charmer 🥰 who's about to take your heart on a delightful journey! ❤
An aha Original you can't resist releasing soon! 🤌🏽#ahaTamil #anahaorginalfilm pic.twitter.com/uEXTMb6QNr
— aha Tamil (@ahatamil) December 25, 2023