பிக் பாஸ் சீசன் 7 முடிந்து ஒரு மாத காலம் நிறைவடைந்து இருக்கும் நிலையில் தற்போது டீம் ஏ என்று அழைக்கப்படும் புல்லி கேங் ரீயூனியன் செய்திருக்கின்றனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு பாஸ் நிகழ்ச்சி வன்மத்துடன் நடந்து முடிந்திருக்கிறது. ஒருவர் மீது ஒருவர் வன்மத்துடனும், இரண்டு குழுக்களாக பிரிந்து கொண்டு டீம் ஏ, டீம் பி எனவும் இந்த நிகழ்ச்சியை விளையாடி முடித்திருந்தனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

முன்பெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முடிந்த பின்னர் அனைவரும் ஒன்றாக இணைந்து டூருக்கு செல்வது, பார்ட்டி செய்வது என்று ஜாலியாக இருப்பது வழக்கம் .ஆனால் இந்த பிக் பாஸில் மட்டும் போட்டி முடிந்த பின்னரும் இன்னும் ஒருவர் மீது ஒருவர் வன்மத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அக்ஷயா, ஐஷூ, நிக்சன், சரவண விக்ரம் ஆகியோர் எப்போதும் ஒன்றாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல தினேஷ், மணி, ரவீனா, கூல் சுரேஷ் ஆகியோர் ஒன்றாக இருந்து வருகின்றனர். டைட்டில் வென்ற அர்ச்சனாவும், விசித்ராவும் எந்த அணியிலும் சேராமல் தனித்து இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாயாவுடன் நண்பர்கள் அனைவரும் ரீ-யூனியன் செய்திருக்கின்றனர்.

மாயா, பூர்ணிமா, சரவண விக்ரம், அனன்யா ராவ், அக்ஷயா, நிக்சன் ஆகிய ஆறு பேரும் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றனர். இந்த புகைப்படங்களை பார்த்த பலரும், “புல்லி கேங்? இன்னும் வெளியே வந்த பிறகும் கூட நீங்கள் திருந்தலையா? என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.