உன் காசு எவனுக்கு டா வேணும்.! மரியாதையா எடுத்துட்டு ஓடி போய்டு.! கோபியை வெளுத்து வாங்கும் தாத்தா.!

விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. குடும்பப் பாங்கான நாடகத் தொடர்களை எடுப்பதில் விஜய் டிவி முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் பெங்காலி மொழி தொடரான ஸ்ரீமோயி என்கிற தொடரை மறு உருவாக்கம் செய்து பாக்கியலட்சுமி என்கிற பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியலில் சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்கிற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் கோபி கதாபாத்திரத்தில் சதீஷ் மற்றும் இன்னும் பலர் நடித்து வருகின்றனர். ஓர் இல்லத்தரசியின் கதை என்கிற வாக்கியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த தொடர் எடுக்கப்பட்டது. இதில் பாக்கியலெட்சுமிக்கு அவரது கணவர் விவாகரத்து கொடுத்துவிட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருகிறார். கோபியியுடன் மகள் இனியாவும், அப்பா ராம மூர்த்தியும் வந்து வசித்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உன் காசு எவனுக்கு டா வேணும்.! மரியாதையா எடுத்துட்டு ஓடி போய்டு.! கோபியை வெளுத்து வாங்கும் தாத்தா.! 1

விளம்பரம்

இந்த கதையில் பாக்கியா அம்மாவாக, மனைவியாக, மருமகளாக, மாமியாராக பல பொறுப்புகளை சுமக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன. சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை. தற்போது கணவரின் இரண்டாவது மனைவி ராதிகா செய்த சதியால் அவருக்கு கிடைக்க இருந்த கேண்டீன் காண்ட்ராக் அவரை விட்டுப் போய்விட்டது. இதனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தான் நடத்தி வரும் மசாலா கம்பெனி வாசலிலேயே அவர் உணவுகளை விற்கும் தொழிலை தொடங்குகிறார். ஆனால் அங்கும் அவருக்கு பல சிக்கல்கள் வருகிறது. இப்படியாக தொடர்ந்து பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்க்கை நடத்தி வருகிறார் பாக்யா.

தொடர்புடையவை  தாலி கட்டும் நேரத்தில் பார்த்தியை கைது செய்து தர தரவென இழுத்து சென்ற போலீஸ்.! கதறி அழும் காவ்யா.!

உன் காசு எவனுக்கு டா வேணும்.! மரியாதையா எடுத்துட்டு ஓடி போய்டு.! கோபியை வெளுத்து வாங்கும் தாத்தா.! 3

விளம்பரம்

இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் பாக்யா தனது மகள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவரை டியூஷன் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார். நிறைய காசுகள் கொடுத்து அவர் ஒரு டியூஷனுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். இதை பார்த்த கோபி ராமமூர்த்தி இடம் வந்து நீங்கள் ஒன்றும் இனியாவின் டியூஷனுக்காக செலவு செய்ய வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார். ஆனால் பாக்யா தனது மகளுக்காக தேடிப் பிடித்து நல்ல டியூஷனை கண்டுபிடித்து அவர்தான் இந்த பணத்தை செலுத்தியிருக்கிறார். நீ வேண்டுமானால் பாக்யாவிடம் சென்று இந்த பணத்தை கொடு என்று ராமமூர்த்தி சொல்ல, கோபி மற்றும் இனியா அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் அந்த புரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment