EVKS இளங்கோவன் மகனும் MLA-வுமான திருமகன் ஈவெரா 46 வயதில் மாரடைப்பால் மரணம்.!

முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவர்களின் மகன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 46. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவான திருமகன் ஈவேரா இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது. இந்த செய்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைந்த ஈவிகே சம்பத் அவர்களின் மகன் ஆவார். தந்தை பெரியாரின் அண்ணனான ஈவே கிருஷ்ணசாமி ஈவிகேஎஸ் இளங்கோவனின் தாத்தா ஆவார். ஈவிகேஎஸ் இளங்கோவன் 1985 ஆம் ஆண்டு முதல் 1988 வரை சத்தியமங்கலம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார். 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EVKS இளங்கோவன் மகனும் MLA-வுமான திருமகன் ஈவெரா 46 வயதில் மாரடைப்பால் மரணம்.! 1

விளம்பரம்

மேலும் 2004 முதல் 2009 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் மத்திய அமைச்சரவையில் ஜவுளித்துறை அமைச்சராகவும் இபிகேஎஸ் இளங்கோவன் இருந்திருக்கிறார். மேலும் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். இந்த காலகட்டத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் வலுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவரது மகன் திருமகன் ஈவேரா 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் யுவராஜாவை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதன்முறையாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றியை ருசித்து எம்எல்ஏவான அவர் எம்எல்ஏவான இரண்டு ஆண்டுகளில் திடீரென மரணம் அடைந்திருக்கிறார்.

தொடர்புடையவை  பெரியார் ஈ.வே.ராமசாமி: அவரது அரசியலும், சமூக மரபின் திட்டமிடலும்!

EVKS இளங்கோவன் மகனும் MLA-வுமான திருமகன் ஈவெரா 46 வயதில் மாரடைப்பால் மரணம்.! 3

விளம்பரம்

மறைந்த திருமகன் ஈவேராவுக்கு ஒரு சகோதரர் இருக்கிறார். மேலும் அவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகளும் இருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தலைவராகவும் திருமகன் ஈவேரா இருந்தார். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு திடீரென இன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இது காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அவரது உடல் ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற இருக்கிறது. அவரின் மறைவுக்கு பல தலைவர்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.! Watch the video below..!

Youtube Video Embed Code Credits: Sathiyam News

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment