ஜெனி போனை போட்டு அந்த ஆளு கோபிய இப்பவே இங்க வர சொல்லு .! செம்ம கெத்து காட்டிய பாக்யா.!

வெளியிட்டது

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. கோபிக்கு போன் செய்து வீட்டிற்கு வர சொல்லுமாறு ஜெனியிடம் பாக்கியா கூறுகிறார். இதனால் கோபியை வீட்டுக்கு வரவழைத்து பாக்யா எதோ பெரிய சம்பவம் செய்ய போகிறார் என்பது மட்டும் தெரிகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் வங்காள தொடர் ஒன்றை மறு உருவாக்கம் செய்யப்பட்டு எடுக்கப்பட்டதாகும். இந்த தொடரில் ஹீரோவாக கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடிகர் சதீஷும், பாக்யாவாக நடிகை சுசித்ராவும் நடித்து வருகின்றனர். இதில் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது மனைவி ராதிகாவுடன் வசித்து வருகிறார் கோபி. தற்போது பாக்யா வீட்டில் புது பிரச்சனை எழுந்திருக்கிறது. அதாவது கோபி கட்டிய வீட்டில்தான் முதல் மனைவி பாக்யா மற்றும் கோபியின் தாய் தந்தை மகன்கள் என அனைவரும் வசித்து வருகின்றனர். கோபி அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு சிறிய வாடகை வீட்டை எடுத்து அதில் தனது இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெனி போனை போட்டு அந்த ஆளு கோபிய இப்பவே இங்க வர சொல்லு .! செம்ம கெத்து காட்டிய பாக்யா.! 1
இந்த நிலையில் எழிலுக்கும் கோபிக்கும் நடந்த ஒரு சிறு பிரச்சினையில் கோபி இந்த வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறுகிறார், இல்லை என்றால் இன்றைய மார்க்கெட் விலை 70 லட்சத்தை கொடுத்து இந்த வீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். ஆனால் எழிலால் அந்த சவாலை எதிர் கொள்ள முடியவில்லை அவரால் அந்த வீடை வாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் எழில் அமிர்தா திருமண பிரச்சனையும் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க, வீட்டிற்கு வந்த கோபி உடனே காலி செய்து விடுங்கள் என்று வீட்டில் உள்ள அனைவரையும் மிரட்டுகிறார். இதனால் கடுப்பான பாக்கியா உங்கள் இருபது லட்ச ரூபாயை முதல் தவணையாக ஆறு மாதத்திற்குள் செலுத்தி விடுகிறேன் என்று சொல்லுகிறார். தொடர்ந்து 8 திருமண வீடுகளில் சாமிக்கும் ஆர்டர்களை பெற்று இருந்தார் பாக்யா. இதனால் அவருக்கு ஒரு சிறிய வருமானம் கிடைத்து இருந்தது.

 

பாக்யா திருமண ஆர்டர்கள், சமையல் ஆர்டர்கள் ஆகியவற்றை எடுத்து அதன் மூலமாக வரும் பணத்தில் கோபியின் கடனை அடைக்க நினைக்கிறார். தற்போது அவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்து திருமண ஆர்டர்கள் கிடைத்து இருக்கின்றது. அதனால் ஏகத்துக்கும் குஷியில் இருக்கும் பாக்யா. எட்டு திருமண ஆர்டர்களை முடித்து இன்று ஜெனி, பாக்யா, அமிர்தா, செல்வி ஆகியோர் அமர்ந்து வரவு செலவு கணக்குகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜெனி மீதம் இவ்வளவு இருக்கிறது என்று சொல்ல என்னுடைய செக் புக் எங்கே இருக்கிறது என்று பாக்யா கேட்கிறார். உடனே ஜெனியிடம் கோபிக்கு போன் செய்து வீட்டுக்கு வர சொல் என்று சொல்கிறார். இதனால் பாக்யா கோபியின் கடனில் முதல் தவணையை அடைத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்