கலெக்டருக்கு ஊருல வேற வேலையே இல்லையா? அபியை அலற விடும் ஜூலி.! இதோ ப்ரோமோ.!

தென்றல் வந்து என்னை தொடும் தொடரின் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் மதியம் மூன்று மணிக்கு திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் கெலேகர் என்கிற வங்காள மொழி தொடரின் மறு உருவாக்கம் ஆகும். இந்தத் தொடரில் வினோத் பாபு, பவித்ரா ஜனனி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் இந்த கதை குறித்து பார்த்தோம் என்றால் அமெரிக்காவில் படித்து விட்டு வரும் அபிநயாவிற்கு ரவுடியாக இருக்கும் வெற்றி திடீரென தாலி கட்டி விடுகிறார். பின்னர் அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் நாடகத்தின் மீதிக் கதை. இதில் வினோத் பாபு வெற்றி என்கிற கதாபாத்திரத்திலும், பவித்ரா ஜனனி அபிநயா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். வினோத் பாபு ஆதித்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமாகினார். மேலும் கலர்ஸ் தமிழில் சிவகாமி என்கிற தொடரிலும், விஜய் டிவியில் சுந்தரி நீயும் சுந்தரி நானும் போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கலெக்டருக்கு ஊருல வேற வேலையே இல்லையா? அபியை அலற விடும் ஜூலி.! இதோ ப்ரோமோ.! 1

விளம்பரம்

அபிநயா ஏற்கனவே ஈரமான ரோஜாவே என்கிற தொடரில் சீசன் 1ல் மலராக நடித்திருந்தார். தற்போது தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடித்து வருகிறார். கோவிலில் வைத்து அபியும் கழுத்தில் வெற்றி திடீரென தாலி கட்டி விடுகிறார் வெற்றி. பின்னர் அபிநயா வெற்றியுடன் தான் வாழ்வேன் என்று செல்கிறார். ஒரு கட்டத்தில் அபிநயாவை புரிந்து கொள்ளும் வெற்றி அவருடன் சேர்ந்து வாழ தொடங்குகிறார். இந்த கதை முடியும் தருவாயில் இருந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜெயிலுக்கு சென்ற வெற்றி ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திரும்புகிறார். அதே போல் அபிநயா ஆறு வருடங்களுக்குப் பிறகு கலெக்டராக மீண்டும் திரும்புகிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த கதை துள்ளாத மனமும் துள்ளும் கதை போல் சென்று விட்டதாக பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கதையில் பிக்பாஸ் பிரபலம் ஜூலி மரியானா தற்போது வக்கீல் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்திருக்கிறார் .அவர் வெற்றிக்காக கோர்ட்டில் வாதாடும் வக்கீல் ஆக நடித்து வருகிறார்.

தொடர்புடையவை  ஷோவை ஒழுங்காக பார்க்காமல் தப்பாக சொன்ன விஜே ஷோபனா.! வச்சி செய்து விட்ட விக்ரமன்.!

கலெக்டருக்கு ஊருல வேற வேலையே இல்லையா? அபியை அலற விடும் ஜூலி.! இதோ ப்ரோமோ.! 3

விளம்பரம்

தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அபிநயா மற்றும் வக்கீலாக வரும் ஜூலிக்கு இடையே வாக்குவாதம் எழுந்திருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் ஜூலியும் அபிநயாவும் இனி நேரடியாக மோதிக் கொள்வார்கள் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment