வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப்பின் வெறித்தனமான நடிப்பில் கொன்றால் பாவம் டீஸர் இதோ.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் வெறித்தனமான நடிப்பில் தற்போது கொன்றால் பாவம் என்கிற படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தமிழில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சரத்குமார் அவர்களின் மகள் ஆவார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார் வரலட்சுமி. தற்போது கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், தெலுங்கு ரசிகர்கள் பலரை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். தாரை தப்பட்டை படத்தில் தர லோக்கலாக நடித்து பலரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார் வரலட்சுமி. தற்போது பல நல்ல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப்பின் வெறித்தனமான நடிப்பில் கொன்றால் பாவம் டீஸர் இதோ.! 1

விளம்பரம்

ஹீரோயின் கதாபாத்திரம் மட்டுமல்லாமல் துணை வேடங்களிலும், வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார். சர்க்கார் படத்தில் அரசியல்வாதியின் மகளாக வில்லியாக நடித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார் வரலட்சுமி. இந்த நிலையில் இவர் இந்த வருடம் மட்டும் எட்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் முக்கியமாக ஹனுமான், சபரி என்கிற இரு தெலுங்கு படத்திலும், கலர்ஸ் என்கிற மலையாள படத்திலும், லஹாம் என்கிற கன்னட படத்திலும் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பாம்பன், பிறந்தாய் பராசக்தி போன்ற படங்களில் நடித்து வருகிறார் தற்போது இவர் சந்தோஷ் பிரதாப்புடன் இணைந்து கொன்றால் பாவம் என்னும் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். கன்னடத்தில் மோகன் ஹப்பு என்பவர் எழுதிய நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட உருவான கரோலா ராத்திரி என்ற படத்தின் ரீமேக் ஆக இந்த படம் உருவாகி இருக்கிறது.

தொடர்புடையவை  96 படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட மஞ்சு வாரியர்!!

வரலக்ஷ்மி, சந்தோஷ் பிரதாப்பின் வெறித்தனமான நடிப்பில் கொன்றால் பாவம் டீஸர் இதோ.! 3
1980களில் நடக்கும் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்டு இந்த படத்தை கன்னடத்தில் தமிழ் இயக்குனர் தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியிருந்தார். தற்போது அவரே இந்த படத்தை தமிழிலும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமி, சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, மீசை ராஜேந்திரன், சென்ராயன் போன்ற பலர் நடித்திருக்கின்றனர். தற்போது இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது, அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த டீசரை நடிகை சமந்தா வெளியிட்டு இருக்கிறார். வரலெட்சுமி மிரட்டலாக நடித்திருக்கும் அந்த டீசரை நீங்களும் காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

விளம்பரம்

Youtube Video Embed Code Credits: Trend Music

விளம்பரம்

Leave a Comment