விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோக்கள் வெளியாகி இருக்கிறது. அதில் கோபியுடன் இணைந்து செழியனும், எழிலும் சாராயம் குடித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த சமயம் பார்த்து பாக்யாவும் ராதிகாவும் வருகின்றனர். அவர்களைப் பார்த்த கோபி பயத்தில் உறைந்து போய் இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இதில் தற்போது கதைப்படி கோபியின் மகன்களாக இருக்கும் செழியன் மற்றும் எழில் இருவரின் திருமண வாழ்விலும் பிரச்சனை ஏற்படுகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

செழியன் மாலினிக்கு இடையே இருந்த நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இதை தெரிந்து கொள்ளும் செழியன் மனைவி ஜெனி அவரை விட்டு பிரிந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றிருக்கிறார். அதேபோல எழில் திருமணம் செய்து கொண்டிருக்கும் அமிர்தாவின் முன்னாள் கணவர் கணேஷ் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அவர் மீண்டும் உயிருடன் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியாக கதை நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது தனது தந்தையுடன் இணைந்து செழியன் மற்றும் எழில் இருவரும் சாராயம் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பேசும் கோபி, “நம்முடைய மூவரின் வாழ்க்கையிலும் பெண்கள் தான் பிரச்சனையாக இருக்கிறார்கள்” என்று புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சரியாக ராதிகாவும், பாக்யாவும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வருகின்றனர். அப்போது இருவரையும் பார்த்து பயந்து நடுங்கும் கோபி, “நான் ஒன்னும் பண்ணல” என்று சொல்லி பீதியில் உறைகிறார். அந்த காமெடியான ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television