பிக் பாஸ் சீசன் 7 முடிவதற்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கிறது. இந்த வார இறுதியில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துடும். இந்த நிலையில் இன்று 101வது நாளுக்கான ப்ரோமோக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாகி வருகிறது. இந்த வாரம் செலிப்ரேஷன் வாரம் என்பதால் பிக் பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் ஆகி சென்ற ஒவ்வொரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கின்றனர். அந்த ப்ரோமோக்களை தற்போது விஜய் டிவி வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

23 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 7 தற்போது ஆறு போட்டியாளர்களாக சுருங்கி இருக்கிறது. மிட் வீக் எவிக்க்ஷனில் விஜய் வர்மா வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள்? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீசன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் எலிமினேட் ஆகிச் சென்ற சரவணன் விக்ரம் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் மாயாவிடம் பேசும் பொழுது நாம் இங்கு பேசுவது ஒன்று, ஆனால் மக்கள் புரிந்து கொள்வது வேறு விதமாக இருக்கிறது என்று கூறுகிறார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் என்று அடித்தால் தன்னுடைய பெயர்தான் முதலில் வருகிறது என்று விக்ரம் கூறிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு மாயா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் மாயா உங்களுக்கு இவ்வளவு தூரம் செய்தும் நீங்கள் இன்னும் மாயாவிடம் போய் பேசிக் கொண்டிருக்கிறீர்களே? என்று சரவணன் விக்ரமே திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television