வீட்ட விக்க போறேன்.! எல்லாம் காலி பண்ணிட்டு வெளியே போங்கடா.! கோபி எடுத்த அதிரடி முடிவு.!

வெளியிட்டது

தான் வாங்கிய வீட்டை தானே விற்க போவதாகவும், அப்படி நீங்கள் வாங்கி கொள்ள விரும்பினால் இன்றைய மார்க்கெட் ரேட்டில் வாங்கி கொள்ள வேண்டும் என்றும் கோபி பாக்கியா மற்றும் எழிலை மிரட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கதாநாயகன் கோபிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பாக்யா. இரண்டாவது மனைவி ராதிகா. முதல் மனைவி பாக்யாவிற்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார் கோபி. இனிமேல் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று பாக்யா கோபியை அடித்து விரட்டி அடித்து விட்டார். மேலும் வீடு கட்ட ஆன செலவான 40 லட்ச ரூபாயும் திருப்பிக் கொடுத்து விடுவேன் என்று கோபியிடம் சவால் விட்டிருக்கிறார் பாக்யா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்ட விக்க போறேன்.! எல்லாம் காலி பண்ணிட்டு வெளியே போங்கடா.! கோபி எடுத்த அதிரடி முடிவு.! 1

 

ஆனால் பாக்யாவால் அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்க முடியவில்லை, திருமண ஆர்டர்களை எடுத்து இரண்டு தவணை மட்டுமே அவரால் செலுத்த முடித்தது. பின்னர் கேண்டீன் காண்ட்ராக்டை நம்பி இருந்த அவருக்கு, ராதிகா சதி செய்து அந்த காண்ட்ராக்ட் கிடைக்கும் விடாமல் செய்துவிட்டார். இதனால் குடும்ப வருமானத்திற்கு திண்டாடி வருகிறார் பாக்யா. ஆனாலும் பாக்கியாவின் மருமகள் ஜெனி பாக்கியாவின் தோற்றத்தை மாற்றுமாறு பியூட்டி பார்லருக்கு அழைத்து சென்று அவரின் தோற்றத்தை மாற்றி இருக்கிறார். ஹேர் ஸ்டைலை மாற்றி செம மார்டன் ஆகவும் ஸ்மார்ட் ஆகவும் மாறி இருக்கிறார் பாக்கியலட்சுமி. இதற்கிடையில் வீட்டில் இருந்து கோபியின் பெயர் பலகையை கழற்றி விட்டு பாக்கியாவின் பெயர் பலகையை மாற்றுகிறார் எழில். இதை பார்த்த கோபி பாக்கியாவிடம் வந்து செம்ம சண்டை போடுகிறார்.

வீடு இன்னும் தன் பெயரில் தான் இருப்பதாகவும், 40 லட்சம் போட்டு இந்த வீட்டை கட்டி இருக்கிறேன், ஆனால் நீ இரண்டு தவணை மட்டும் தான் கட்டி இருக்கிறாய். 3 வது தவணை கூட கட்டவில்லை என்று கடுமையாக சண்டை போடுகிறார் கோபி. தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தான் வாங்கிய வீட்டை தானே விற்க போவதாகவும், அப்படி நீங்கள் வாங்கி கொள்ள விரும்பினால் இன்றைய மார்க்கெட் ரேட்டில் வாங்கி கொள்ள வேண்டும் என்றும் கோபி பாக்கியா மற்றும் எழிலை மிரட்டுகிறார். இதனால் பாக்கியா நிலை குலைந்து போய் நிற்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.அந்த ப்ரோமோவை நீங்களும் காண.! Watch the below Video.! 

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்