ஸ்ருதிகா பிறந்தநாள் கேக்கில் கிடந்த பல்லி.! பயத்தில் அலறி தலைதெறிக்க ஓடிய ஸ்ருதிகா..

ஸ்ருதிகாவின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு பல்லி போல கேக் செய்து குக் வித் கோமாளி நண்பர்கள் பாடாய் படுத்தி உள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. குத் வித் கோமாளியில் கலந்து கொண்டு பலரின் உள்ளங்களை கவர்ந்துள்ளவர் ஸ்ருதிகா. இவர் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி ஆவார். முதல் படமே தமிழில் சூர்யாவுடன் ஸ்ரீ என்ற படத்தில் அறிமுகமானார். முதல் படமே தோல்வியை சந்தித்தது. இருந்தாலும் மனம் தளராமல் நளதமயந்தி, ஆல்பம், தித்திக்குதே படங்களில் நடித்தார். இந்த படங்களும் தொடர் தோல்வியை சந்திக்கவே திரைத்துறையில் இருந்து முற்றிலும் விலகிவிட்டார். ஆனால் இவர் நடித்த செல்லமே செல்லம் என்றாயடா பாடல் இன்றளவும் பிரபலமானது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ருதிகா பிறந்தநாள் கேக்கில் கிடந்த பல்லி.! பயத்தில் அலறி தலைதெறிக்க ஓடிய ஸ்ருதிகா.. 1

விளம்பரம்

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஸ்ருதிகாவிற்கு சின்னத்திரையில் மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. குத் வித் கோமாளியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தினார். முதல் பரிசையும் தட்டி சென்றார். தான் நடித்த படங்கள் அனைத்துமே தோல்விதான் என்று பல பேட்டிகளில் அவரே சொல்லி சிரிப்பார். குத் வித் கோமாளிக்கு வந்த பிறகு ஸ்ருதிகாவின் செல்வாக்கு சற்று உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அவரின் வெள்ளந்தியான பேச்சும், சிரிப்பும், குரேஷியுடன் சேர்ந்து அவர் செய்யும் காமெடிகள் அவருக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

தொடர்புடையவை  ஸ்விட்சர்லாந்தில் பனி மழையில் அமீருடன் செம்ம ஆட்டம் போடும் பாவனி.! செம்ம ஜாலியா இருக்காங்களே.!

ஸ்ருதிகா பிறந்தநாள் கேக்கில் கிடந்த பல்லி.! பயத்தில் அலறி தலைதெறிக்க ஓடிய ஸ்ருதிகா.. 3

விளம்பரம்

இவரின் கணவர் அர்ஜூன். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ஸ்ருதிகா மற்றும் அர்ஜுன் ஒரு youtube சானல் ஒன்றை தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஸ்ருதிகாவிற்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிவாங்கி, புகழ், பென்சி, தர்ஷன், சந்தோஷ் பிரதாப், அம்மு அபிராமி என குக் வித் கோமாளியில் பங்கெடுத்த பிரபலங்கள் அனைவருமே கலந்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்ருதிகாவுக்கு கேக் ஒன்று வெட்டப்பட்டது. அந்த கேக்கின் மேல் கிரீமால் பல்லி போன்ற ஒரு உருவத்தை செய்து வைத்திருந்தனர். இதை பார்த்து ஸ்ருதிகா அலறி அடித்துக் கொண்டு ஓடினார். காமெடியாக உள்ள அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Shrutika Arjun

விளம்பரம்

Leave a Comment