ராமராஜன் நடிக்கும் பான் இந்தியா படம்.! ‘சாமானியன்’ படத்தின் டீஸர் வெளியானது.!

90களில் முன்னணி நாயகனாக இருந்தவர் ராமராஜன். இவர் தற்போது நடித்து வரும் சாமானியன் படத்தின் டீசர் தற்போதைய வெளியாகியிருக்கிறது. ரஜினி, கமல், விஜயகாந்த் பல முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் எந்தவித சினிமா பின்புலமும் இல்லாமல் சுயமாக முன்னுக்கு வந்தவர் நடிகர் ராமராஜன். இவர் நடித்த கரகாட்டக்காரன் படம் இன்றளவும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராமராஜன் திரைப்படங்களில் நடிக்காமல் பல ஆண்டுகளாக விலகியிருந்தார். 12 அண்டுகளுக்குப் பிறகு தற்பது அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் சாமானியன் படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ராமராஜனுடன் இணைந்து ராதாரவி மற்றும் எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த மூன்று பேரும் இணைந்து இந்த சமூகத்திற்கு என்ன செய்கின்றார்கள் என்பது குறித்த படம்தான் சாமானியன். டீசர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ராமராஜன் நடிக்கும் பான் இந்தியா படம்.! 'சாமானியன்' படத்தின் டீஸர் வெளியானது.! 1
இந்தப் படத்தை எக்ஸ்டரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்து இருக்கிறார். இயக்குனர் ராகேஷ் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ராகேஷ் ஏற்கனவே தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். ராஜாமணி இசையமைத்திருக்கிறார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். 1986 ஆம் ஆண்டு படங்களில் நடித்த தொடங்கியவர் ராமராஜன். இவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்று சொன்னால் அது கங்கை அமரன் இயக்கத்தில் வந்த கரகாட்டக்காரன் படம் தான். இவர் கடைசியாக 2012 ஆம் ஆண்டு மேதை என்னும் படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிப்பதில் இருந்து விலகி அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். 10 ஆண்டுகளாக படம் நடிக்காமல் விலகி இருந்த ராமராஜன் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு திரும்ப இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  தலைவரு நிரந்தரம்.! எப்படி இருக்கு ஜெயிலர் படம்.? முழு விமர்சனம் இதோ.! TamilGlitz ரேட்டிங் (?/5)

ராமராஜன் நடிக்கும் பான் இந்தியா படம்.! 'சாமானியன்' படத்தின் டீஸர் வெளியானது.! 3

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அப்பா ரோல், வில்லன் ரோல் போன்றவைளே வந்து கொண்டிருந்தது, லீட் ரோலில் நடிப்பதற்காக இத்தனை நாள் காத்துக் கொண்டிருந்தாக கூறினார். தற்போது அவர் நடிக்கும் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அந்த டீசரை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Tips Tamil

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment