96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.!

தமிழ் சினிமாவில் இருக்கும் ஜோடிகளில் பிரபலமானவர்கள் தான் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி. இவர்கள் இருவருமே ஒரு நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சேத்தன் நடிக்க வருவதற்கு முன்பாக இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிக் கொண்டிருந்தார். பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டிஒலி என்ற தொடரின் மூலமாக பிரபலமானார். மேலும் இவர் சில படங்களிலும் நடித்திருக்கிறார். இவரது மனைவி தேவதர்ஷினி இவர் பல படங்களில் துணை வருடங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக காஞ்சனா 1 படத்தில் கோவை சரளாவுடன் இவர் செய்த காமெடி மிகப் பெரிய வரவேற்பு பெற்று இருந்தது. ஆரம்பத்தில் சன் டிவியில் 2000 ஆண்டு ஒளிபரப்பான ரமணி vs ரமணி என்ற சீரியலில் காமெடி ரோலில் நடித்திருப்பார் தேவதர்ஷினி. இந்த நாடகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 1

விளம்பரம்

பின்னர் 2003 ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு என்ற படத்தில் நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருப்பார். இந்த படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார். அன்று முதல் இன்று வரை பல காமெடி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரே ஒரு மகள் உண்டு. அவர் பெயர் நியதி கடம்பி. இவர் சமீபத்தில் வெளியான 96 என்ற படத்தில் சிறுவயது தேவதர்ஷினியாக நடித்திருப்பார். தனது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. நியதிக்கு பிகில் படத்தில் ஃபுட்பால் டீமில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்தார்.

தொடர்புடையவை  ரெண்டு பேரும் நல்லா இருங்க..! ரவீந்தர் மஹாலக்ஷ்மியை மனதார வாழ்த்திய வனிதா.!

96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 3 96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 5 96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 7

விளம்பரம்

பத்தாம் வகுப்பு பரீட்சை காரணமாக நியதியால் பிகில் படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் அவர் மிகவும் வருந்தியதாகவும் தேவதர்ஷினி கூறினார். 96 படத்திற்கு பின்னர் நியதி வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சிறிய இடைவேளைக்குப் பின்பு தனது மகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் தேவதர்ஷினி. அவர் மகள் கதாநாயகி அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் நியதி வளர்ந்து ஹீரோயின் போல் மாறிவிட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் நியதி கதாநாயகியாக அறிமுகம் ஆக இருப்பதாகவும், அதற்காக தேவதர்ஷினி கதையை கேட்டு வருவதாகவும், அதனாலேயே இந்த போட்டோ சூட்டை நடத்தி இருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 9 96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 11 96 படத்தில நடிச்ச தேவதர்ஷினி மகளா இது? யப்பா ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.! 13

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment