சமையல் ஆர்டரில் பாக்கியாவுக்கு ஷாக் கொடுத்த ஹோட்டல் மேனேஜர்.! கண்கலங்கும் பாக்கியா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ மகா சங்கமத்தின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. விஜய் டிவியின் மிகப்பெரிய இரண்டு சீரியல்களாக இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘பாக்கியலட்சுமி’ ஆகிய இரண்டு தொடர்களும் அடிக்கடி மகா சங்கமம் வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரமும் மகா சங்கமம் நடந்து வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமையல் ஆர்டரில் பாக்கியாவுக்கு ஷாக் கொடுத்த ஹோட்டல் மேனேஜர்.! கண்கலங்கும் பாக்கியா.! 1
பாக்யா அரசு பொருட்காட்சியில் செய்த ஆர்டரை பார்க்கும் அமைச்சர், தங்களது கட்சி நிகழ்ச்சிக்கும் சமைக்குமாறு பாக்யாவிற்கு மிகப்பெரிய ஆர்டர் கொடுக்கிறார். அந்த சமயம் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் அவர்களுடன் இணைந்து சமைத்துக் கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சாப்பாடு செய்து தயார் நிலையில் பாக்கியா மற்றும் கோமதி இருவரும் வைத்திருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஹோட்டல் மேனேஜர், இன்னும் 200 பேர் அதிகமாக வர இருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்து சமைக்குமாறு உத்தரவு போடுகிறார்.


அப்போது கோமதியும் மீனாவும், மறுபடியும் முதலில் இருந்து சமைக்க வேண்டுமா? 200 பேருக்கு சமைக்க வேண்டும் என்று இப்போது வந்து சொல்கிறாரே. என கேட்கின்றனர். இதனால் பாக்கியா அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்