விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய திவ்யா கணேஷ்.! இதுதான் காரணமா?

வெளியிட்டது

பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் திவ்யா கணேஷ், தற்போது விஜய் டிவியின் வேறு ஒரு சீரியலில் இருந்து விலகி உள்ள செய்தி தற்போது கிடைத்திருக்கிறது. தொடர்ந்து சீரியல்களில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடைபெற்று வருவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பெல்லாம் நெடுந்தொடர்கள் என்றால் ஒரு ஆண்டுகள் இரண்டு ஆண்டுகள் எடுப்பார்கள். ஆனால் தற்போதெல்லாம் ஐந்து ஆண்டுகள் முதல் எட்டு ஆண்டுகள் வரை எல்லாம் நீண்டு கொண்டே இருக்கிறது. இதனால் அந்த நாடகத்தில் நடிக்கும் நடிகர்கள் தங்களின் அடுத்த கட்ட வாழ்க்கையை பார்ப்பதற்காக சீரியலில் இருந்து தொடர்ந்து விலகி வருகிறார்கள். பலருக்கும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதால் தொடர்ந்து சீரியல்களில் இருந்து விலகி வருகிறார்கள். குறிப்பாக விஜய் டிவியில் நடிக்கும் பலருக்கும் சினிமாவில் வாய்ப்புகள் கிடைப்பதால் தொடர்ந்து விலகி வருகின்றனர்.

விஜய் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய திவ்யா கணேஷ்.! இதுதான் காரணமா? 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான தொடர்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலரின் ஆதரவு இருந்து வருகிறது. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் காலனியில் செயலாளர் தேர்வுக்காக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ராதிகாவை வீழ்த்தி பாக்கியா முன்னேறிச் சென்றிருக்கிறார். இந்த சீரியலில் பாக்கியலட்சுமியின் மூத்த மகன் செழியனின் மனைவியாக ஜெனி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை திவ்யா. ராமநாதபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் நடிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக திரைத்துறையில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி, சுமங்கலி, விஜய் டிவியில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை, ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு போன்ற பல சீரியல்களில் நடித்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, செல்லம்மா போன்ற சீரியல் நடித்து வருகிறார் இதில் பாக்கியலட்சுமியில் ஜெனியின் கதாபாத்திரம் வரவேற்பு பெற்று இருக்கிறது. மாமியாருக்கு மிகுந்த ஆதரவாக இருக்கும் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் திவ்யா. செல்லம்மா சீரியலில் மேகா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். தற்போது செல்லம்மா சீரியல் இருந்து விலகி இருக்கிறார் திவ்யா அவருக்கு பதில் ஸ்ரீயா என்பவர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

செல்லம்மா சீரியல் நடிகர் அர்னவ் மற்றும் அவரது மனைவி திவ்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அர்னவும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாவும் நெருக்கமாக இருந்து வருவதாக அர்னவ் மனைவி திவ்யா குற்றம் சாட்டி இருந்தார். இந்த பிரச்சினை எழுந்த நாள் முதல் சீரியலின் டிஆர்பியும் பயங்கர அடி வாங்கியது. இந்த பிரச்சினையால்தான் திவ்யா சீரியலை விட்டு விலகினாரா என்றும் அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்