பிரபல நடிகர் கார்த்திக் தற்போது WWE நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் கார்த்திக். இவர் பருத்திவீரன் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால், அடுத்தடுத்த படங்களில் நடித்த கமிட்டானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகர் என்கிற விருதையும் பெற்றார். பின்னர் இவர் சிறுத்தை, பையா, ஆயிரத்தில் ஒருவன், மெட்ராஸ் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய கதாபாத்திரமான வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடித்து பல ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் கார்த்திக். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறது. அதில் கார்த்திக் WWE நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார் என்று தற்போது அந்த ப்ரோமோ வெளியாக இருக்கிறது. சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்த மல்யுத்த வீரர்களுக்கும் ரசிகர்கள் இருக்கின்றனர் என்று சொன்னால் அது மிகையில்லை. பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் 90ஸ் கிட்ஸ் wwe நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அதேபோல் சண்டை பயிற்சி செய்வது, நண்பர்கள் கழுத்தில் ஸ்மாக் போடுவது என்று செய்து காட்டிக் கொண்டிருப்பர். அப்படி ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்த இந்த நிகழ்ச்சி தற்போது மீண்டும் இந்தியாவில் நடக்க இருக்கிறது. அந்த ப்ரோமோ தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இதில் ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் தமிழில் கார்த்தி ஆகியோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
Ready to take your #WWE Action up a notch 🔥
Catch 100% Pure Sports Entertainment LIVE, every week, only on the #SonySportsNetwork 📺@WWE
@WWEIndia@Karthi_Offl#WWEIndia #RAW #NXT #Smackdown pic.twitter.com/Lzoe8t7WaP— Sony Sports Network (@SonySportsNetwk) December 14, 2022
மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட இந்த ரெஸ்லிங் நிகழ்ச்சியில் இருக்கும் இந்திய ரசிகர்களுக்காக மல்யுத்த வீரர் Drew Mclntyre இதை இந்தியாவில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார். ஹிந்தியில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜான் ஆபிரகாமும் தமிழில் நடிகர் கார்த்தியும் பங்கேற்க இருப்பதாக சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. அந்த வீடியோவை நீங்களும் காண.! கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the below video.!
YouTube Video Code Embed Credits: Sony Sports Network