டூப்ளிகேட் பணமா என்று கேட்ட கோபி.! வச்சி செய்து விட்ட பாக்யா.! தரமான ப்ரோமோ.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரம் பரபரப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது பாக்யா 18 லட்ச ரூபாயை கோபியின் முகத்தில் வீசி எறிந்து அவரது முகத்தில் கரியை பூசி இருக்கிறார். அந்த ப்ரோமோ சில நாட்களுக்கு முன்பே வெளியான நிலையில், இன்றைய எபிசோடு மீண்டும் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. அதில் கோபியில் 18 லட்சம் ரூபாயை வாங்க மறுத்து பாக்யாவை அசிங்கப்படுத்த நினைக்கிறார். ஆனால் பாக்யாவும் கோபியின் தந்தை ராமமூர்த்தியும் இணைந்து கொண்டு கோபியை பங்கம் செய்து அனுப்பிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் டி ஆர் பி ரேட்டிங்கில் டாப் ஹிட் தொடராக இருந்து வருகிறது. மூத்த மனைவி பாக்கியாவை தான் கட்டிய வீட்டிலிருந்து துரத்தி அடிக்க நினைக்கிறார் கோபி. அதற்காக பாக்யாவிடம் 40 லட்ச ரூபாய் பணத்தைக் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

டூப்ளிகேட் பணமா என்று கேட்ட கோபி.! வச்சி செய்து விட்ட பாக்யா.! தரமான ப்ரோமோ.! 1

40 லட்ச ரூபாய் பணத்தில் பாக்யா பெருமளவுத் தொகையை கோபிக்கு கொடுத்துவிட்டார். மீதம் 18 லட்சம் மட்டுமே இருந்த நிலையில் ஒரு மாதத்தில் 18 லட்ச ரூபாயை கொடுக்க விட்டால் வீட்டை காலி செய்யும்படி கோபி கூறியிருந்தார் இதனால் சமையல் ஆர்டர் எடுத்து கஷ்டப்பட்டு எட்டு லட்ச ரூபாய் பணத்தை சேர்த்திருந்தார். ஆனால் மீதி அவருக்கு 10 லட்ச ரூபாய் எப்படி திரட்டுவது என்றே தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் எழில் ஐந்து லட்ச ரூபாயும், செழியன் 5 லட்ச ரூபாயும் கொடுத்து மொத்தம் பத்து லட்ச ரூபாயை பாக்யாவின் கையில் கொடுத்திருந்தனர். ஆர்டர் செய்த காசு எட்டு லட்சத்தை சேர்த்து மொத்தம் 18 லட்சத்தை பாக்யா தற்போது கோபியிடம் கொடுத்து இருக்கிறார். ஆனால் இதை நம்பாத கோபி அதை டூப்ளிகேட் பணமா என்று கேட்டு பாக்கியாவை அசிங்கப்படுத்துகிறார். அப்போது குறுக்கிட்ட கோபியின் தந்தை ராமமூர்த்தி நீ வங்கியில் தானே வேலை செய்கிறாய்? கலெக்ஷன் வேலை தானே செய்கிறாய்? உனக்கு தெரியாதா? இது நல்ல நோட்டா? கள்ள நோட்டா? என்று பதிலடி கொடுக்கிறார்.


தந்தை கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அவமானமாக உணரும் கோபி தலை குனிந்து நிற்கிறார். வரும் வாரங்களில் அவர் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்று தெரிகிறது. அடுத்த விறுவிறுப்பான கட்டங்கள் இந்த தொடரில் நடக்க இருப்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கிடக்கின்றனர். தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்