நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது அதிரடி ஆக்ஷனில் நடித்திருக்கும் திரைப்படம் தான் அநீதி. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் முதல் முறையாக ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அநீதி. இந்த திரைப்படத்தின் டீசரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அர்பன் பாய்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் அநீதி திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு தெலுங்கில் “பிளட் அண்ட் சாக்லேட்” என்ற பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் அநீதி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் வருகிற 21ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பல படங்களில் துணை வேடங்களில் நடித்து வந்த அர்ஜுன் தாஸ் தற்போது முதல் முறையாக ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெளியான பெருமான் என்கிற படத்தில் நடித்ததின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அர்ஜுன் தாஸ். பின்னர் ரேண்டம் நம்பர் என்கிற குறும்படத்தில் நடித்தார். அதன் பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து வந்த அவருக்கு 2019 ஆம் ஆண்டு வெளியான கைதி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இவர் கூறும் லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற வார்த்தைக்காகவே பலருக்கும் இவரது ரசிகர்கள் ஆகிப்போகினர். பின்னர் அந்தகாரம், மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது அவர் ஓஜி என்கிற தெலுங்கு படத்திலும் தளபதி விஜய் நடித்து வரும் லியோ படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடிக்க இருக்கிறார். துருவ நட்சத்திரம் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இது மட்டுமல்லாமல் சில மியூசிக் ஆல்பம் வீடியோக்களையும், பின்னணி பேசுபவராகவும் இருந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். தற்போது அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் டீசர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்தப் படத்தில் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிகை துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜி வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்ய ரவிக்குமார் படத்தொகுப்பு பணிகளை செய்திருக்கிறார். திரில்லிங் கதையம்சம் கொண்ட ஒரு சினிமாட்டிக் படமாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நல்ல வரவேற்பை பெற்று வரும் அந்த டீசரை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Think Music India