பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இனியாவை கல்லூரியில் சேர்ப்பதற்காக சென்னையின் மிகப் பெரிய கல்லூரி ஒன்றின் விண்ணப்ப படிவத்தை கோபி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் இனியா அந்த படிப்பை தேர்வு செய்ய தனக்கு விருப்பம் இல்லை என்றும், தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்க வேண்டும் என்று விரும்புவதாகவும் கோபியிடம் கூறுகிறார். பின்னர் பாக்யா இனியா எது பிடிக்கிறதோ அதை செய்யட்டும் அவள் என்ன படிக்க விரும்புகிறாரோ அதைத்தான் படிப்பாள், யார் சொல்லியும் படிக்க மாட்டாள என்று கோபியிடம் சண்டை போடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

பாக்கியலட்சுமி தொடரில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில் இனியா 600க்கு 596 மதிப்பெண்கள் எடுத்து பள்ளியிலேயே முதலிடம் பிடித்திருக்கிறார். அவர் அடுத்தபடியாக கல்லூரிக்கு சேர்வதில் தற்போது வீட்டில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இனியா விஸ்காம் படிக்க விரும்பும் நிலையில் தற்போது அவரது தந்தை இனியாவை பிபிஏ படிக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அதற்காக அவர் கல்லூரியில் இருந்து விண்ணப்ப படிவம் ஒன்றையும் வாங்கி வந்து இனியாவிடம் வற்புறுத்துகிறார். அப்போது இனியா தனக்கு இதெல்லாம் படிக்க பிடிக்கவில்லை, தான் விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கவே விரும்புகிறேன் என்று கூறுகிறார். ஆனால் இனியாவை தொடர்ந்து கோபி கட்டாயப்படுத்துகிறார் இதனால் பாக்யா கடுப்பாகிறார்.

பாக்கியா கோபியை பார்த்து இனியாவிற்கு என்ன பிடிக்கிறதோ அதை தான் அவர் படிப்பார், யார் சொல்லியும் அவர் படிக்கப் போவதில்லை என்று கோபத்துடன் கூறுகிறார். அப்போது எழிலும் இனியா விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கத்தான் போகிறார் என்று பதில் அளிக்கிறார். இதனால் தற்போது பரபரப்பு எழுந்திருக்கிறது. நீங்களும் தற்போது வெளியாகி இருக்கும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television