விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இதில் பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா பல இல்லங்களில் இருக்கும் அம்மாவை போலவே பிரதிபலிப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. வீட்டில் இருக்கும் அம்மாக்கள் எவ்வளவு வேலை செய்தாலும் அவர்களுக்கு என்று பாராட்டுகளோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரமாக தான் பாக்யா நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக கணவன் தன்னை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு மனைவியுடன் வசிக்கும் பொழுதும் பல தொந்தரவுகளைக் கொடுக்கும் பொழுதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார் பாக்யா.

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் கதைப்படி பாக்கியா திருமண ஆர்டர்கள் எடுத்து அங்கு சமைத்து அதன் மூலமாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மேலும் தனது கணவர் 70 லட்சம் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி வரும் நிலையில் முதல் கட்ட தவணையாக 2 லட்ச ரூபாயை கொடுத்து இருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் 20 லட்ச ரூபாயை கொடுத்து முதல் தவணையை முடித்துவிட்டு இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக பாக்கியா கோபியிடம் சவால் விட்டு இருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சீரியலில் புது என்ட்ரியாக நடிகர் ரஞ்சித் வந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். பழனிச்சாமி என்கிற கதாபாத்திரத்தில் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.
தற்போது கதைப்படி பாக்கியாவும் பழனிசாமியும் நெருங்கி பழகி வருகின்றனர். இதனால் கோபி செம்ம கடுப்பில் இருக்கிறார். தற்போது பாக்யவிடம் கோபி செம்ம கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதில் யார் அந்த நபர் அவர் கூட வண்டியில் போகிறாய் என்று கேட்க நான் என்ன வேண்டும் என்றாலும் செய்வேன் அதை கேட்க நீ யார் என்று கேட்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television