பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கோபி ராதிகாவை பார்த்து வாய்க்கு வந்தபடி கண்ட மேனிக்கு பேசுகிறார் .மேலும் எனக்கு உன்னை பிடிக்கவே இல்லை, பாக்கியம் தான் பெஸ்ட், நீ வேஸ்ட் என்றும் ராதிகாவை கோபமாக திட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியலில் ஹீரோ கோபிக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்கள். மூத்த மனைவியின் பிள்ளைகளுக்கே திருமணம் ஆன நிலையில் தற்போது கோபி இரண்டாவதாக ராதிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராதிகா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிய நிலையில் கோபியுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர்கள் இருவரும் பாக்கியாவின் வீட்டிற்கு எதிர் வீட்டிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வருகின்றனர். ராதிகாவை திருமணம் செய்த நாள் தொடங்கி கோபிக்கு ஏதாவது ஒரு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கோபிக்கு ஏதாவது ஒரு வகையில் தொல்லை கொடுத்து வருகிறார் ராதிகா. ஆரம்பத்தில் அவருக்கு சமைக்க கூட தெரியாது. ஒரு காபி கூட போட்டுக் கொடுப்பதில்லை. பின்னர் கடையில் வாங்கி சாப்பிட்டு காலத்தை கழித்து வந்தார் கோபி. பின்னர் தொடர்ந்து கோபிக்கும் ராதிகாவிற்கும் ஏதாவது ஒரு சண்டை இருந்து கொண்டே இருக்கிறது. கோபியால் நிம்மதியாக வாழ முடியவில்லை. இதற்கு இடையில் இனியாவுக்கும் ராதிகாவிற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டிருக்க கோபி எப்பொழுதும் இனியாவிற்கு ஆதரவாக பேசுவதால் ராதிகா அவரை திட்டிக்கொண்டே இருக்கிறார். மேலும் கோபியின் தாய் மற்றும் தந்தை பாக்யாவிற்கே ஆதரவாக இருக்கின்றனர். தன்னை மருமகளாக அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார் ராதிகா. இந்த நிலையில் பாக்யா வீட்டை திரும்பி வாங்கிக் கொள்வதற்காக முதல் தவணையாக 2 லட்சம் ரூபாயை கொடுத்தது முதல் பாக்யா மீது கோபிக்கு ஒரு பாசிட்டிவ் எண்ணங்கள் வந்திருக்கிறது.

இதைக் கோபி ராதிகாவிடம் கூறிக் கொண்டிருக்கும்போது, ராதிகாவிற்கு மிகவும் எரிச்சல் ஏற்படுகிறது. அன்று தொடங்கி இன்று வரை கோபிக்கும் ராதிகாவிற்கும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. இதனால் சாராயம் குடிக்க தொடங்குகிறார் கோபி. குடித்து விட்டு தினமும் வீட்டிற்கு வருவதால் பிரச்சனை பூதாகரமாகிறது. இந்த நிலையில் இன்று குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் கோபி ராதிகாவை திட்டுகிறார். தண்ணீர் கூட பிடித்து வைக்க முடியவில்லை, நீ ஆரம்பத்தில் நன்றாக பேசினாய். இப்பொழுது பேய் போல் இருக்கிறாய். நீ வேஸ்ட், பாக்கியா தான் பெஸ்ட். பாக்யாவுடன் வாழ்ந்த போது நான் நிம்மதியாக இருந்தேன் என்று புலம்பி தள்ளுகிறார். அவரை அவரது தந்தை ராமமூர்த்தி சமாதானம் செய்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television