மகளின் 3வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதிகள்.!

ஆலியா மானசா இன்று தனது மகளின் மூன்றாவது பிறந்த நாளை வீட்டில் மிகப்பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அந்த வீடியோவை தற்போது அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த வீடியோவுக்கு லைக்குககள் குவிந்து வருகிறது. மேலும் ஆலியாவின் மகளுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்கிற நிகழ்ச்சியின் மூலமாக நடன கலைஞராக அறிமுகமானவர் ஆலியா மானசா. பின்னர் இவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சின்னத்திரைக்குள் நுழைந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்கிற தொடரில் செம்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் ஆலியா. முதல் நாடகமே மிகப்பெரிய தொலைக்காட்சியில் என்ட்ரி கொடுத்தார். அந்த நாடகத்தில் அவருக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மகளின் 3வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதிகள்.! 1
சஞ்சீவ் ஆரம்பத்தில் குளிர் 100 டிகிரி என்கிற படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். பின்னர் சில படங்களில் நடித்த அவர் வெள்ளித்திரை ஒத்து வராததால் சின்னத்திரை பக்கம் திரும்பினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி, காற்றின் மொழி ஆகிய சீரியல்களில் நடித்த அவர் தற்போது சன் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் கயல் சீரியல் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆலியா ராஜா ராணி பாகம் இரண்டில் நடித்து வந்த நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் சீரியலை விட்டு விலகி இருந்தார். தற்போது சன் தொலைக்காட்சிக்கு சென்றிருக்கும் அவர் அங்கு இனியா என்கிற சீரியலில் நடித்து வருகிறார். ஆலியாவின் தனிப்பட்ட வாழ்க்கையை பொருத்தவரை அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். மூத்த மகள் பெயர் ஐலா. இரண்டாவது மகன் பெயர் அர்ஷ். இருவரும் பார்ப்பதற்கு பொம்மை போல் இருப்பதால் இவர்கள் செய்யும் குறும்புத்தனங்கள் நிறைந்த வீடியோக்களுக்கும் பார்வையாளர்கள் அதிகம் இருக்கின்றனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  ஓடி விளையாடு பாப்பா கூட தெரியல.! அசீம் மற்றும் மைனாவை வச்சி செய்யும் ஆண்டவர்.!

மகளின் 3வது பிறந்தநாள்.! கேக் வெட்டி பிரம்மாண்டமாக கொண்டாடிய ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதிகள்.! 3
இணையத்தை கலக்கி வரும் க்யூட் ஜோடிகளாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகள் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். தங்களது பிள்ளைகள் செய்யும் சேட்டைகளை வீடியோக்களாக எடுத்து அடிக்கடி பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஐலாவுக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவை சஞ்சய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிந்திருக்கிறார். ஐலாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

விளம்பரம்

 

YouTube Video Embed Code Credits: Sanjiv and Alya

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment