“உங்க அப்பா திருப்பி அப்பாவாக போறாரு” அனைவரிடமும் உண்மைகளை உடைத்த பாக்யா.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ராதிகா வீட்டில் உள்ள அனைவரையும் நடு் ஹாலில் அழைத்து வைத்து, உங்கள் அனைவரிடமும் கோபி ஒரு முக்கியமான விஷயத்தை பேசப் போகிறார் என்று கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கோபி எதுவும் பேசாமல் திணறிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் அங்கு வரும் பாக்யா, “கோபி மீண்டும் அப்பா ஆகப் போகும் விஷயத்தை அனைவரிடமும் போட்டு உடைக்கிறார். இதனால் கோபி அதிர்ச்சியில் உறைகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"உங்க அப்பா திருப்பி அப்பாவாக போறாரு" அனைவரிடமும் உண்மைகளை உடைத்த பாக்யா.! 1

ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளும் கோபிக மீண்டும் அப்பாவாகி இருக்கிறார். முதல் மனைவி பாக்யாவின் மகன்களுக்கே திருமணம் ஆகி, அவர்களுக்கே குழந்தை இருக்கும் நிலையில் கோபியின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தை வீட்டில் உள்ள யாரிடமும் சொல்லாமல் இத்தனை நாட்களாக கோபி மறைத்து வைத்திருக்கிறார். ஆனால் பாக்கியாவுக்கும், ஈஸ்வரிக்கும் இந்த விஷயம் தெரிந்து விடுகிறது.

இந்த நிலையில் ராதிகா அனைவரையும் கூப்பிட்டு நடு ஹாலில் வைத்து கோபியிடம் உண்மையை கூறுமாறு கூறுகிறார். ஆனால் கோபி உண்மையை கூற முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், பாக்யா அங்கு வந்து, “உங்கள் அப்பா மீண்டும் அப்பாவாக போகிறார்” என்கிற உண்மையைப் போட்டு உடைக்கிறார். இதனால் அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கின்றனர். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

YouTube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்