10,000 என நினைத்து ஒரு லட்ச ரூபாய் புடவையை வாங்கிய பாண்டியன்.! காமெடியான ப்ரோமோ இதோ.!

விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர் சீசன் 2’ தொடரின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பாண்டியனின் மூத்த மகன் சரவணனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், குடும்பத்துடன் புடவை எடுப்பதற்காக பாண்டியன் துணி கடைக்கு சென்று இருக்கிறார். அங்கு விலை தெரியாமல் ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான புடவையை எடுத்து தங்க மயிலுக்கு கொடுக்கிறார். அந்த காமெடியான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

10,000 என நினைத்து ஒரு லட்ச ரூபாய் புடவையை வாங்கிய பாண்டியன்.! காமெடியான ப்ரோமோ இதோ.! 1

விளம்பரம்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் மற்ற இரண்டு மகன்களும் காதல் திருமணம் செய்து கொண்டதால், கடுப்பான பாண்டியன், மூத்த மகனுக்கு தான் பார்த்து வைக்கும் பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக செய்து வருகிறார். ஆனால் இந்த குடும்பமும் ஃபிராடு குடும்பம் என தெரியாமல் பாண்டியன் மிகப்பிரமாண்டமாக செலவு செய்து வருகிறார். இந்த நிலையில் துணி கடைக்கு செல்லும் அவர் புடவையில் பத்தாயிரம் ரூபாய் பணம் என்பதை பார்த்துவிட்டு புடவையை எடுத்து விடுகிறார்.

தொடர்புடையவை  நீ இப்படியே கேம் ஆடுடா..அதான் நல்லாருக்கு.. பாலாவிடம் ஜூலி சொன்ன விஷயம் | BB Ultimate Promo

10,000 என நினைத்து ஒரு லட்ச ரூபாய் புடவையை வாங்கிய பாண்டியன்.! காமெடியான ப்ரோமோ இதோ.! 3

விளம்பரம்

ஆனால் புடவையின் விலை உண்மையில் ஒரு லட்சத்து 10 ஆயிரம். பில்லை பார்த்ததும் ஷாக் ஆகி விடுகிறார். அதன் பின்னர் மகன்கள் கோர்ட்டு சூட் வாங்க வேண்டும் என முடிவெடுக்கின்றனர். இதனால் இந்த கல்யாணம் நடப்பதற்கு என்னுடைய அனைத்து பணமும் போய்விடுமோ என்கிற கவலையில் அதிர்ந்து போய் அமர்ந்திருக்கிறார் பாண்டியன். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..! 

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Sun TV

விளம்பரம்

Leave a Comment