விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபியை வீட்டிலிருந்து செழியன் மற்றும் எழில் ஆகியோர் வெளியேறுமாறு கூறுகின்றனர். ஆனால் கோபி இது தான் கட்டிய வீடு தான் வீட்டிலிருந்து வெளியேற மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் கோபியின் தாயார் ஈஸ்வரி, உன் மகன்கள் உன்னை ஏதாவது செய்வதற்குள் வீட்டிலிருந்து வெளியேறி விடு என்று சொல்லி கோபியை எச்சரிக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கதாநாயகனாக இருக்கும் கோபிக்கு, இரண்டாவதாக ராதிகாவுடன் திருமணம் நடைபெறுகிறது. ஆனால் கோபிக்கு ஏற்கனவே பாக்யாவுடன் திருமணம் ஆகி அவரது மகன்களான எழில், செழியன் ஆகியோருக்கும் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா மீண்டும் கர்ப்பம் ஆகிறார். இது வீட்டில் உள்ள அனைவருக்கும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயம் தெரிந்து கோபியின் மூத்த மனைவிக்கு பிறந்த பிள்ளைகளான செழியன், எழில், இனியா என அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில், கோபியை வீட்டிலிருந்து வெளியேறுமாறு செழியன் மற்றும் எழில் ஆகிய இருவரும் கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் வீட்டில் இருந்து வெளியேற மாட்டேன் என் அம்மா சொன்னால் தான் வீட்டில் இருந்து வெளியேறுவேன் என கோபி கூற, ஈஸ்வரி அந்த இடத்திற்கு வந்து உன் மகன்கள் உன்னை ஏதாவது செய்வதற்குள் இந்த வீட்டில் இருந்து வெளியேறி விடு என எச்சரிக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television