விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தற்போது மனோஜ் புதிய பிசினஸ் தொடங்குவதற்காக கடைக்குச் சென்று சேர் உள்ளிட்ட ஜாமான்களை வாங்கி வருகிறார். பின்னர் வீட்டிற்கு வரும் மனோஜ், தனது தாயாரின் பெயர் வைப்பது குறித்து ரோகிணியிடம் சில கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார். இதை ஒட்டு கேட்கும் முத்து அதையும் போனில் ரெக்கார்டு செய்து வைத்துக்கொண்டு மனோஜை மிரட்டுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் மனோஜ்க்கு அவரது தந்தை அண்ணாமலை கொடுத்த பணத்தை மனோஜின் காதலி தூக்கிக்கொண்டு வெளிநாடு ஓடி விடுகிறார். தற்போது அந்த காதலியை கண்டுபிடிக்கும் மனோஜ், அவரிடமிருந்து ரூ.15 லட்சத்தை திரும்ப பெறுகிறார். ஆனால் ரோகிணியின் தந்தை இந்த பணத்தை கொடுத்ததாகவும், இதை வைத்து புதிய தொழில் தொடங்கப் போவதாகவும் வீட்டில் உள்ள அனைவரிடமும் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் பொய் கூறுகின்றனர். இதை வைத்து தற்போது புதிய தொழிலை தொடங்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தனது தாயார் விஜயாவின் பெயரை வைத்தால் பிசினஸ் நன்றாக ஓடாது என்று மனோஜ் ரோகிணியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். பார்லரும் போய்விட்டது, பூக்கடையும் போய்விட்டது எனவே விஜயா என்கிற பெயரை புதுத் தொழிலுக்கு வைக்க வேண்டாம் என ரோகிணியிடம் மனோஜ் கூறிக் கொண்டிருந்ததை முத்து போனில் ரெக்கார்டு செய்து விடுகிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television