இனியாவுக்காக பாக்யா செய்த செயல்..! பாக்யா நடிப்பை பார்த்து கண்ணு கலங்குது.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பலரும் பாக்கியாவின் எதார்த்தமான நடிப்பை பாராட்டி வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பை கூட்டிக் கொண்டு செல்கிறது. தற்போது பாக்யாவின் கணவர் கோபி பாக்கியாவை விட்டு பிரிந்து தனது காதலியான ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் சென்றுவிட்டார். பாக்கியா தனி ஒரு ஆளாக இருந்து இந்த குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார். மேலும் திருமண வீடுகளில் சமையல் ஆர்டர்களை எடுத்து, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து கோபியிடம், 40 லட்சம் வீடு கட்ட ஆன செலவை திருப்பி தருவதாக வாக்களித்திருக்கிறார். தற்போது பாக்யாவிற்கு திருமண ஆர்டர்களும் வந்து இருப்பதால், முதல் தவணையாக 40 ஆயிரம் ரூபாய் கோபிக்கு அனுப்பி இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.!

இனியாவுக்காக பாக்யா செய்த செயல்..! பாக்யா நடிப்பை பார்த்து கண்ணு கலங்குது.! 1

மேலும் தனது குடும்பத்தை கவனத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் பாக்யா. தற்போது மகள் இனியாவின் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிக்காக செல்ல இருக்கிறார். இது நாள் வரை இனியா தனது தாய் பெற்றோர் சந்திப்புக்கு வருவதை விரும்பவில்லை. ஏனென்றால் பாக்யா படிக்காதவர், அவருக்கு எதுவும் பேசத் தெரியாது என்று அவரை உதாசீனப்படுத்துவார். அதனால் இனியா எப்போதும் அவரது தந்தை கோபியையே பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு அழைத்துச் செல்வார். தற்போது கோபி இல்லாத காரணத்தினால் பாக்கியா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு செல்ல இருக்கிறார். அதற்கு முன்பாக பாக்யா தனக்குத்தானே தயாரித்துக் கொள்கிறார். கண்ணாடியை பார்த்து எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.

முன்பு ஒரு முறை இதுபோல் பள்ளிக்கு சென்ற போது பாக்யா நடந்து கொண்ட விதம் இனியாவுக்கு பிடிக்கவில்லை. பாக்யாவை, இனியா திட்டியிருந்தார். அதனால் இந்த முறை அது போல் எதுவும் நடந்துவிடக் கூடாது என்று பாக்கியா தனக்குத்தானே தயாரித்துக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் பொழுது பலருக்கும் மனம் நெகிழ்ந்து போகிறது. நம் வீடுகளில் இருக்கும் அம்மா போலவே பாக்யா ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதால் பலரையும் இந்த சீரியல் கவர்ந்திருக்கிறது. இப்போது பாக்யாவை பார்க்கும் இனியாவும் நெகிழ்ந்து போகிறார். இனிமேலாவது இனியா தனது தாய் பாக்யாவை படிக்காதவர் என்று திட்டாமல் இருந்தால் சரி..நீங்களும் அந்த ப்ரோமோவை காண..! Watch the below video.!

Youtube Video Code Embed Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்