மழை காரணமாக நின்று போன பொருட்காட்சி.! பாக்யா தலையில் விழுந்த அடுத்த பேரிடி.! ப்ரோமோ இதோ.!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தற்போது பாக்கியாவிற்கு அடுத்த பேரிடியாக ஒரு செய்தி அமைந்திருக்கிறது. கன மழையால் அவர் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு எடுத்த பொருட்காட்சி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாக்யாவின் மாமியார் ஈஸ்வரி அந்த காண்ட்ராக்ட்டை திருப்பிக் கொடுக்குமாறு பாக்யாவை வற்புறுத்துகிறார். தொடர்ந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பாக்யா அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். அரசு நடத்தும் பொருட்காட்சியில் சமையல் காண்ட்ராக்ட் எடுக்கும் பாக்யா சூப்பர் மார்க்கெட் அண்ணாச்சியுடன் கடனுக்கு பொருட்கள் தரும்படி பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்க்கும் கோபி பாக்யாவால் மானம் போகிறது என்று ராதிகாவிடம் கூறுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நின்று போன பொருட்காட்சி.! பாக்யா தலையில் விழுந்த அடுத்த பேரிடி.! ப்ரோமோ இதோ.! 1

அப்போது ராதிகா இனி பாக்யா விஷயம் பற்றி பேசிய நீங்கள் என்றால் நான் கிளம்பி போய் விடுவேன் என்று சொல்லி கோபியை மிரட்டுகிறார். ஆனால் பாக்யாவிற்கு சப்போர்ட் எல்லாம் பண்ணலை, இனி பாக்யா விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று கூறுகிறார். நிலைமை இப்படி இருக்க சமையலுக்கு தேவையான பொருட்களை ஒருபுறம் வண்டியில் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். அப்போது தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. அந்த சமயம் ஈஸ்வரி இந்த மழையில் போய் தான் நீ பொருட்காட்சியில் சமையல் செய்யப் போகிறாயா? என்று சொல்ல, நான் எப்படியாவது இந்த காண்ட்ராக்டை செய்து முடிப்பேன் என்று பாக்யா கூறுகிறார்.


பொருட்களை ஏற்றிவிட்டு வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது தொலைக்காட்சியில் கனமழை காரணமாக அரசு நடத்தவிருந்த பொருட்காட்சியை நிறுத்தப் போவதாக அறிவிக்கப்படுகிறது. இதனால் பாக்யா தற்போது அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கிறார். நீங்களும் தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Vijay Television

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்