வீட்டை விட்டு வெளியே போ எழில்..! மகனை வீட்டை விட்டு விரட்டிய பாக்கியா..! மனைவியுடன் வெளியேறிய எழில்..!

வெளியிட்டது

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. நாள்தோறும் தொடரின் சுவாரஸ்யத்தை இயக்குனர் அதிகரித்து கொண்டே சென்று ரசிகர்கள் கூட்டத்தையும் அதிகரித்து இருக்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீட்டை விட்டு வெளியே போ எழில்..! மகனை வீட்டை விட்டு விரட்டிய பாக்கியா..! மனைவியுடன் வெளியேறிய எழில்..! 1

தற்போது தொடரின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. ப்ரோமோவில் , ஈஸ்வரி குழந்தை பற்றி கேட்டதை அமிர்த எழிலிடம் சொல்லவே , அதனை கேட்டு கடுப்பாகிய எழில் வீட்டில் ஈஸ்வரியுடன் சண்டை இடுகிறார். இதனால் ஈஸ்வரி , அமிர்தா வந்ததால்தான் வீட்டில் சண்டை என கூறுகிறார். மேலும் எழில் வீட்டை விட்டு வெளியேறினால் தான் வீட்டின் அருமை தெரியும் எனவும் கூறுகிறார்.

மகன் அவமானப்படுவதை தாங்க முடியாத பாக்கியா , எழிலை வீட்டை விட்டு வெளியே போக சொல்லுகிறார். அம்மா சொன்னதை கேட்டு உடைந்த எழில் அமிர்தாவை கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார். அவரை செழியன் தாத்தா தடுக்க முயன்றும் கேட்காமல் வெளியே செல்கிறார். இதனை தாங்க முடியாமல் பாக்கியா அழுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Embed Video Credits : VIJAY TELEVISION

வெளியிட்டது

புதிய செய்திகள்