விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஆயிரம் எபிசோட்கள் கடந்து குடும்ப தலைவிகள் பேராதரவுடன் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது தொடர். நாளுக்கு நாள் இந்த தொடருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாரத்தின் புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தாத்தாவுக்கு 80வது பிறந்தநாளை கொண்டாட அனைவரும் திட்டம் தீட்டுகின்றனர். தனக்கு ஏன் பிறந்தநாள் என்கிறார் தாத்தா. ஈஸ்வரி எழிலை, பாக்கியாவிடம் அழைக்க சொல்லவே அதற்கு பாக்கியா மறுத்துவிடுகிறார். இதனால் ஈஸ்வரி கடும் அதிர்ச்சி அடைகின்றார். எழில் மீது அதிக பாசத்தை வைத்துக்கொண்ட ஈஸ்வரி,
எழிலுக்கு போன் செய்து அழைக்கிறார். ஆனால் எழில் வரமாட்டேன் என கூறுகிறார். இதனால் கடுப்பாகிய ஈஸ்வரி , நீ வரவே வேண்டாம் என கூறுகிறார். இதனை கேட்டு எழில் கண்ணீருடன் உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : VIJAY TELEVISION