Wow..! அமீர் பாவனி நடித்துள்ள முதல் ஆல்பம்.. ப்ரோமோ வெளியீடு

அமீர் பாவனியின் முதல் ஆல்பம் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 5வில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி. இதில் பாவனி ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது கணவர் திருமணமான சில மாதங்களிலேயே, சிறிய பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனால் பாவனி மீது அனைவருக்கும் ஒரு பரிதாப உணர்வு இருந்து வந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தவர் நடன இயக்குனர் அமீர். இவர் பாவனியை காதலிப்பதாக பிக்பாஸில் இருந்த போது கூறி வந்தார். ஆனால் பாவனி அமீரின் காதலை ஏற்காமலேயே இருந்து வந்தார். இந்த நிலையில் இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

Wow..! அமீர் பாவனி நடித்துள்ள முதல் ஆல்பம்.. ப்ரோமோ வெளியீடு 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியின் போதும் பலமுறை அமீர் தன் காதலை ஏற்க்குமாறு பாவனியிடம் கூறி வந்தார். ஆனால் பாவனி கூறும் பொழுது, தான் ஒரு ராசி இல்லாதவர், தான் யாரிடமாவது நெருங்கி சென்றால் அவர்கள் தன்னை விட்டு விலகிவிடுவார்கள். அதனால் தான் அமீரின் காதலை ஏற்பதற்கு தயக்கமாக இருக்கிறது என்று கூறி வந்தார். இந்நிலையில் அமீர் மற்றும் பாவனி பிக்பாஸ் நடன ஜோடிகள் நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்தனர். நடனம் என்றால் என்னவென்றே தெரியாத பாவனியை மிக கஷ்டப்பட்டு நடனம் ஆட வைத்தார் அமீர். இதனால் நெகிழ்ந்து போன பாவனி அமீரின் காதலை ஏற்றார். இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பாவனி, இனி நம் வாழ்க்கையை தொடங்குவோம், ஐ லவ் யூ அமீர் என்று தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்புடையவை  ஏர்போர்ட்டில் வைத்து கடுமையாக சண்டை போட்ட ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி.! கூடிய கூட்டம்.!

Wow..! அமீர் பாவனி நடித்துள்ள முதல் ஆல்பம்.. ப்ரோமோ வெளியீடு 3

விளம்பரம்

இந்த நிலையில் இருவரும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக அமீர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் இருவரும் ஒரு ஆல்பம் பாடலில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். அந்த ஆல்பம் பாடலின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஆல்பம் வரும் 20ம் தேதி வெளியாக உள்ளது. அந்த ப்ரோமோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sony Music South

விளம்பரம்

Leave a Comment