இவரு தான் புது கோபியா? கோபியை மாத்திட்டாங்களா? ராதிகாவுடன் சஞ்சீவ் இருக்கும் வைரல் போட்டோ!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியல் நடித்து வரும் கோபியை மாற்றிவிட்டதாகவும், அவருக்கு பதில் புதிதாக நடிகர் சஞ்சீவ் நடித்து வருதாகவும் வெளியான புகைப்படங்களால் பாக்கியலட்சுமி சீரியலின் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவருடைய தாய் தந்தை மற்றும் தம்பி ஆகிய அனைவரும் ஒரு விபத்தில் இறந்துவிட சென்னைக்கு இரண்டு டவுசர்களை மட்டுமே எடுத்து வந்ததாக ஒரு வீடியோவில் கூறியிருந்தார் கோபி. சென்னைக்கு வந்து தனது அத்தை வீட்டில் வளர்ந்த அவருக்கு நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சன் டிவியில் ஒளிபரப்பான மந்திரவாசல் என்கிற நாடகத்தின் மூலமாக சின்னத்திரைக்குள் அடியெடுத்து வைத்தார் சதீஷ்.

இவரு தான் புது கோபியா? கோபியை மாத்திட்டாங்களா? ராதிகாவுடன் சஞ்சீவ் இருக்கும் வைரல் போட்டோ! 1

இத அதே சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் நாடகத்திலும், சூலம் நாடகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் படங்களிலும் சின்னத்திரையிலும் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்த அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ள ஒரு நாடகம் என்றால் அது பாக்கியலட்சுமி சீரியல்தான். இந்த நாடகத்தில் இரண்டு மனைவிகளுடன் அவர் படும் கஷ்டத்தை அழகாக நடித்து வருகிறார் கோபி. ஆரம்பத்தில் வில்லன் போல் காட்டப்பட்ட கோபி, தற்போது இரண்டாவது மனைவியிடம் மாட்டிக்கொண்டு அவதிப்படும் காட்சிகள் ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைக்கிறது. இந்த நிலையில் இன்று இணையத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ராதிகாவுடன், சஞ்சீவ் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.

இந்தப் புகைப்படத்தை பகிர்ந்த சிலர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபியை மாற்றி விட்டார்கள் என்ற வதந்தியை கிளப்பி விட்டனர். ஆனால் உண்மையில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து கோபி மாற்றப்படவில்லை. சஞ்சீவும் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மாவும் இணைந்து ஒரு புதிய விளம்பரப்படத்தில் நடித்து வருகின்றனர். அந்த விளம்பரத்திற்கான ஷூட்டிங் தான் இது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்