தமிழின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது ஒரு பேட்டியின் போது தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுத்திருக்கிறார். மனதை உருக வைக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவர் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு இருக்கும் நோய் பற்றிய விவரங்களை பதிவாக பதிவிட்டிருந்தார். அந்த பதிவிற்கு பிறகு தற்போது பேட்டி ஒன்றை அளித்து இருக்கும் சமந்தா, தனக்கு அரிய வகை நோய் இருப்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதிருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சமந்தாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் திருமணம் நடைபெற்ற விவாகரத்து ஆகியிருந்தது. விவாகரத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் சமந்தா. இவர் தற்போது நடித்துவரும் இரண்டு படங்கள் யசோதா மற்றும் சாகுந்தலம் விரைவில் திரையில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் யசோதா படத்திற்காக டப்பிங் பேசும் ஒரு வீடியோவை மருத்துவமனையில் இருந்து வெளியிட்டு இருந்தார். கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருக்கும்போது, அவர் டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். இந்த புகைப்படத்தை பகிர்ந்த அவர் தனக்கு தானாக எதிர்ப்பு சக்தி குறையும் நோய் இருப்பதாக கூறி இருந்தார்.

மையோசெட்டீஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் குறைபாடு உள்ள நோய் இருப்பதாகவும், இது அரிய வகை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நோயோடு போராடிக் கொண்டிருக்கிறேன் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்று உருக்கமான பதிவு ஒன்றை போட்டிருந்தார். தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கும் சமந்தா இந்த நோய் குறித்து பேசும் பொழுது கண்கலங்கி அழுதார். அவரின் முழு பேட்டியை நீங்களும் காண..! Watch the below video..!