பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த முன்னணி நடிகர்.! பாக்கியாவுக்கு ஜோடியா இவரு.!

வெளியிட்டது

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில் புதிய நடிகர் ஒருவர் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். இதில் பாக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் சுசித்ரா பல இல்லங்களில் இருக்கும் அம்மாவை போலவே பிரதிபலிப்பதால் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. வீட்டில் இருக்கும் அம்மாக்கள் எவ்வளவு வேலை செய்தாலும் அவர்களுக்கு என்று பாராட்டுகளோ அங்கீகாரமோ கிடைப்பதில்லை. இருந்த போதிலும் தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருப்பார்கள். அப்படி ஒரு கதாபாத்திரமாக தான் பாக்யா நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக கணவன் தன்னை விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு மனைவியுடன் வசிக்கும் பொழுதும் பல தொந்தரவுகளைக் கொடுக்கும் பொழுதும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னேறிக்கொண்டே இருக்கிறார் பாக்யா.

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுத்த முன்னணி நடிகர்.! பாக்கியாவுக்கு ஜோடியா இவரு.! 1

தற்போது பாக்கியலட்சுமி சீரியலின் கதைப்படி பாக்கியா திருமண ஆர்டர்கள் எடுத்து அங்கு சமைத்து அதன் மூலமாக தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். மேலும் தனது கணவர் 70 லட்சம் கொடுத்து வீட்டை வாங்கிக் கொள்ளுமாறு வற்புறுத்தி வரும் நிலையில் முதல் கட்ட தவணையாக 2 லட்ச ரூபாயை கொடுத்து இருக்கிறார். இன்னும் ஆறு மாதத்தில் 20 லட்ச ரூபாயை கொடுத்து முதல் தவணையை முடித்துவிட்டு இந்த வீட்டை வாங்கிக் கொள்வதாக பாக்கியா கோபியிடம் சவால் விட்டு இருக்கிறார். கதை இப்படியாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது சீரியலில் புது என்ட்ரியாக நடிகர் ரஞ்சித் வந்திருக்கிறார் நடிகர் ரஞ்சித். பழனிச்சாமி என்கிற கதாபாத்திரத்தில் சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இன்றைய எபிசோடில் வண்டியில் வரும் பாக்யா மீது அவர் மோதி விடுகிறார். இதனால் நிலைகுலைந்த பாக்யா கீழே விழுந்து விடுகிறார். இவ்வாறு இவர்கள் இருவரின் முக்கிய சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது.

ரஞ்சித்தின் இந்த என்ட்ரி தற்காலிகமானதா? கெஸ்ட் ரோலா? அல்லது கதை முழுவதும் தொடருமா என்பது தெரியவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்ட இதே தொடரில் அனுஜ் கபாடியா என்கிறவர் நடித்தார். அதனால் அந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அதேபோல ரஞ்சித்தின் கதாபாத்திரமும் சீரியல் முழுக்க வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இது கொஞ்சம் நாளைக்கு தான் என்றும், கோபியை வெறுப்பேற்றுவதற்காக தான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை இறக்கி இருக்கிறார்கள் என்றும் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர். நடிகர் ரஞ்சித் தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்திருக்கிறார். துணை வேடங்கள், வில்லன் கதாபாத்திரங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என பலவற்றில் நடித்திருக்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்கிற நாடகத்திலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்