பாக்கியலட்சுமி சீரியலில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருந்த அமிர்தாவின் கணவர் கணேஷ் மீண்டும் உயிருடன் வந்துவிட்டார். வீட்டுக்கு திரும்பி வரும் அவர் அமிர்தாவையும் குழந்தையையும் எங்கே என்று தேடுகிறார். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அமிர்தாவின் மாமனாரும் மாமியாரும் தனது மகன் கணேஷ் விபத்தில் இறந்து விட்டதாக எண்ணிக் கொண்டு அமிர்தாவை பாக்யாவின் இரண்டாவது மகன் எழிலுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் கணேஷ் விபத்தில் இறக்காமல் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விடுகிறார். மகன் நினைவு நாளில் அவரது படத்திற்கு மாலை போட்டு விளக்கேற்றிக் கொண்டிருக்கும் அவர்கள் அனைத்தையும் கலைத்துவிட்டு தனது மகனை கண்ணீர் மல்க வரவேற்கின்றனர்.
பின்னர் தனது பெற்றோரிடம் அமிர்தாவையும் குழந்தையையும் எங்கே என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் கணேஷ். இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. தற்போது வெளியாகியிருக்கும் அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Vijay Television