காட்டுக்குள் காணாமல் போன ஈஸ்வரி.! தேடி அலையும் பாக்யா.! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கேரளாவுக்கு டூர் சென்றிருக்கும் பாக்கியலட்சுமி மற்றும் ஈஸ்வரி இருவரும் மலை பகுதியில் காணாமல் போய்விடுகின்றனர். இருவரும் ஒருவரை ஒருவர் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். இதனால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது இனியாவின் ப்ராஜெக்ட் விஷயத்திற்காக அனைவரும் கேரளாவிற்கு சென்று உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காட்டுக்குள் காணாமல் போன ஈஸ்வரி.! தேடி அலையும் பாக்யா.! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ 1

விளம்பரம்

ஆரம்பத்தில் இனியா தனது தந்தையை அழைத்துச் செல்ல முடிவெடுத்த நிலையில் மயூ பருவம் எய்திவிட்டதால் அவருக்கு சடங்குகள் இருந்த காரணத்தினால் கோபி வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பாக்யா, ஈஸ்வரி, செல்வி, இனியா என அனைவரும் கிளம்பி கேரளாவிற்கு டூர் செல்கின்றனர். டூர் சென்ற இடத்தில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. முதலில் கார் ரிப்பேர் ஆனது. பின்னர் ஹோட்டல் கிடைக்காமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர். காட்டுப்பகுதிக்குள் செல்லும் பாக்யா ஈஸ்வரியை தவற விட்டுவிட்டார். ஈஸ்வரி தனியாக அலைந்து கொண்டிருக்கிறார்.

தொடர்புடையவை  வீட்டிற்கு தெரியாமல் PUB-ற்கு சென்ற இனியா..! கைது செய்த போலீசால் பரபரப்பு..!

காட்டுக்குள் காணாமல் போன ஈஸ்வரி.! தேடி அலையும் பாக்யா.! பாக்கியலட்சுமி ப்ரோமோ இதோ 3
ஈஸ்வரியை தேடி கத்திக் கொண்டே காட்டில் நடந்து சென்று கொண்டிருக்கிறார் பாக்யா. ஈஸ்வரியும் பாக்யா பாக்யா என என கத்திக் கொண்டிருக்கிறார். அப்போது இனியா போன் செய்து ஈஸ்வரி காணாமல் போன விஷயத்தை கோபியிடம் கூறுகிறார். நீங்களும் அந்த ப்ரோமோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும். ! Watch the Below Video..!

விளம்பரம்

YouTube Video Embed Code Credits: Vijay Television

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment