விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கேண்டீன் ஆர்டர் கையை விட்டு போனதை கலாய்த்து கோபி பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, “என்னை விட்டுப் போன தொழில் மீண்டும் என்னிடம் வரும் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்” என்று சொல்லி பாக்கியா கோபியை அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் பல இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த தொடராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குடும்பத் தலைவியாக இருக்கும் பாக்யா, ஈஸ்வரி மசாலா, ஐடி கேண்டீன் ஆர்டர், திருமண சமையல் ஆர்டர் என பலவற்றையும் ஒரே பெண்ணாக இருந்து செய்து வந்தார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பிற்கு செல்வது, கல்லூரிக்கு செல்வது என்று இடையிடையே பாக்யா வேறு சிலவற்றையும் கவனித்து வந்தார். இது நெட்டிசன்கள் பலராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பாக்யாவின் ஐடி கம்பெனி கேண்டின் ஆர்டரும் அவரது கையை விட்டு போயிருக்கிறது. தற்போது இது குறித்து பேசும் கோபி, கேன்டீன் ஆர்டர் எடுப்பது பிசினஸ் செய்வது எல்லாம் சும்மா கிடையாது.

நான்கு அண்டா குண்டாவை வைத்து நாலு பெண்களை வைத்து எல்லாவற்றையும் சாதித்து விட முடியும் என்று நினைக்காதே என்று பாக்யாவை அசிங்கப்படுத்துகிறார். இதனால் கோபமடைந்த பாக்யா என்னை கவனிப்பதை விட்டுவிட்டு போய் உங்கள் வேலையை பாருங்கள் என்று சொல்லி அனுப்பி விடுகிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Vijay Television